இடிந்து போன வீடு.. தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பரியேறும் பெருமாள் பட நடிகர்!
சென்னை: பரியேறும் பெருமாள் பட நடிகர் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள்.
ஆதிக்க சமுதாயத்தின் அத்துமீறல்களை தோலுரிக்கும் படமாக இந்த படம் இருந்தது.

நீலம் புரடெக்ஷன்
இந்த படத்திற்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன் இப்படத்தை தயாரித்தது.

பரிதாபத்திற்குரிய நிலையில்
இந்தப் படம் பல விருதுகளையும் குவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கதிருக்கு அப்பாவாக நடித்திருந்த நாட்டுப்புற கலைஞர் பெரும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்
பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்திருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ். திருநெல்வேலியில் வசித்து வருகிறார். படத்தில் பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கலைஞராக நடித்திருப்பார்.

மழையில் வீடு சேதம்
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் இவரது வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தங்கராஜ் உதவி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டை சீரமைத்து தர முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சாப்பாட்டுக்கே கஷ்டம்
மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் லாக்டவுன் ஆகிய காரணங்களால் தங்கராஜுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் வருமானம் இன்றியும் உள்ளார். இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார் தங்கராஜ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











