கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த பரியேறும் பெருமாள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சாதி கொடுமைகளை பளிச்சென்று காட்டிய அந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள். களவாணி மாப்பிள்ளை படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் தான் பரியேறும் பெருமாளை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்.
ரீமேக் படத்தில் நடிக்க முன்னணி கன்னட நடிகர்கள் பலர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இந்த படத்திற்கு முன்னணி நடிகர் தேவை இல்லை என்று புதுமுகம் மைத்ரேயாவை ஹீரோவாக்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர் ஏ.வி. எம். சரவணனின் பேத்தி அபர்ணாவின் கணவர் தான் இந்த மைத்ரேயா. பரியேறும் பெருமாள் ரீமேக்கிற்காக அவர் கர்நாடக கிராமப்புற மக்களுடன் பேசிப் பழகி அவர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
பரியேறும் பெருமாள் போன்றே அதன் ரீமேக்கும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











