நாம் எல்லோரும் நாயாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம்: பரியேறும் பெருமாள் இயக்குனர்
பரியேறும் பெருமாள் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது
சென்னை: மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
கபாலி, காலா என பெரிய படங்களை இயக்கிய ரஞ்சித் நல்ல திறமையாளர்களை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பத்திரிகையாளராக இருந்த மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
[பரியேறும் பெருமாள்.. 40 கிலோ 'கிம்பல்' உதவியுடன் முழுப்படத்தையும் எடுத்த ஒளிப்பதிவாளர்!]

அரசியல்
கதிர், ஆனந்தி, யோகிபாபு மூவரும் திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் படிக்கிறார்கள். கல்லூரி கதை என்பதைத் தாண்டி பல நுணுக்கமான அரசியல் விஷயங்களை இப்படம் பேசும் எனத் தெரிகிறது. இப்படத்தில், ஐந்து நாய்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. கருப்பி என்ற ஒரு நாட்டு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. கதிருக்கும் கருப்பிக்கும் இடையேயுள்ள பந்தத்தை விளக்க கருப்பி என்ற பாடல் உள்ளது. அதை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

நாய் அது நாயல்ல
இப்படத்தைப் பற்றி பேசிய மாரி செல்வராஜ், ஒரு குழந்தை இறந்து போகிறதென்றால் அது ஏன் இறக்கிறது என்று அதற்குத் தெரியாது. அதேபோல்தான் நாய் இறப்பதற்கான காரணமும் அதற்குத் தெரியாது. எல்லோரும் நமக்கு நாய் போன்ற காதலி, கணவன், அம்மா, மனைவி வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். நீங்கள் வளர்க்கும் நாய் உங்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்படும். இப்படத்தில் வரும் மனிதர்களின் மனநிலையை ஒரு நாய் தீர்மானிக்கிறது அதுதான் கதை. இப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நாயை நாயாகப் பார்க்க மாட்டீர்கள் எனக் கூறியுள்ளார்.

உதவி இயக்குனர்
ஷூட்டிங்குக்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் பயிற்சிபெற்ற நாயை பயன்படுத்தாமல், கிராமத்தில் உள்ள ஒரு நாயை பயன்படுத்தியுள்ளனர்.ஒரு இடத்தில் கூட வழக்கமான சினிமாவாக இது இருக்காது. ஒரு வாழ்க்கை அனுபவமாக இருக்கும் என்கிறார் ஆனந்தி. டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

வெளியீடு
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு அடுத்த நாள் ரிலீஸானாலும் நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











