Parking Deleted Scene: பார்க்கிங் படத்துல இப்படியொரு க்ளைமேக்ஸ்ஸா... ட்ரெண்டாகும் டெலிட்டட் சீன்!

சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான பார்க்கிங், பின்னர் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து படக்குழு வெளியிட்டுள்ள டெலிட்டட் சீன் வைரலாகி வருகிறது.

பார்க்கிங் அப்டேடட் வெர்ஷன் க்ளைமேக்ஸ்

கடந்தாண்டு டிசம்பரில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ். பாஸ்கர், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மினிமம் பட்ஜெட்டில் உருவான பார்க்கிங் அதிக எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக MS பாஸ்கரின் மிரட்டலான நடிப்பை ரசிகர்கள் பாராட்டித் தள்ளினர்.

 Parking Deleted Scene: Parking movie deleted climax scene is trending now

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் கார் பார்க்கிங் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதுவே இருவருக்கும் ஈகோ யுத்தமாக வெடிக்க அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை. ஆரம்பத்தில், நட்பாக பழகும் ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் போகப் போக எப்படி எதிரியாக மாறி மோதிக் கொள்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார் இயக்குநர்.

கதை, திரைக்கதை, மேக்கிங், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பு என அனைத்துமே விமர்சன ரீதியாக படத்துக்கு பெரும் பலம் சேர்த்தன. இந்தப் படத்தின் இறுதியில் ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் ஒருவருக்கொருவர் சமாதானம் ஆவதோடு, இரண்டு குடும்பங்களும் வீட்டை காலி செய்துவிட்டு செல்வதாக க்ளைமேக்ஸ் அமைந்திருக்கும்.

 Parking Deleted Scene: Parking movie deleted climax scene is trending now

இந்நிலையில், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள டெலிட்டட் சீன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது பார்க்கிங் படத்தின் இன்னொரு க்ளைமேக்ஸ்ஸாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த காட்சியில் எம்.எஸ் பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் படம் பார்க்க தியேட்டர் செல்கிறார். அப்போது கார் பார்க்கிங் செய்ய ஒரேயொரு இடம் மட்டுமே இருக்க எம்.எஸ் பாஸ்கர் தனது காரை அங்கே பார்க் செய்ய போகிறார்.

அப்போது அதே இடத்தில் பார்க்கிங் செய்ய இன்னொரு கார் வருகிறது. அதில் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி, குழந்தையுடன் இருக்கிறார். இருவருமே ஒருவரையொருவர் முறைத்து முறைத்து பார்க்க, இறுதியில் இரண்டு கார்களுமே அங்கிருந்து வேறு பார்க்கிங் செல்கின்றன. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் இருவரும் விட்டுக்கொடுத்ததை பார்த்து அவர்களது குடும்பத்தினரும் சந்தோஷமாகின்றனர். பார்க்கிங் வெளியாகி சூப்பர் ஹிட்டான பின்னரும் இந்த டெலிட்டட் சீன் மூலம் படத்துக்கு ப்ரோமோஷன் செய்துள்ளது படக்குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X