பார்க்கிங் சக்சஸ் மீட்.. இயக்குநருக்கு கிஃப்ட் கொடுத்த ஹரிஷ் கல்யாண்!
சென்னை: பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் சூப்பர் கிப்ட் கொடுத்து அசத்தினார்.
ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான திரைப்படம் பார்க்கிங்.
இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது.

பார்க்கிங்: ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பமான மனைவி இந்துஜாவுடன் ஒரு புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் எம்.எஸ்.பாஸ்கர் அவரது குடும்பத்துடன் நீண்ட காலமாக வாடகைக்கு வசித்து வருகிறார். கர்ப்ப காலத்தில் தன் மனைவிக்காக கூட்டிச் செல்ல வசதியாக இருக்க புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண்.
படத்தின் கதை: வாங்கிய காரை தான் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனுக்கு அருகே பார்க் செய்கிறார். அருகில் அரசு அதிகாரியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் இருசக்கர வாகனமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. தினமும் கீழ் போர்ஷன் அருகே காரை பார்க் செய்வதால் தனது இருசக்கர வாகனத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதால் எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதுதான் படத்தின் கதை.
சக்சஸ் மீட்: ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அனைவருக்கும் நன்றி: தொடர்ந்து பேசிய, ஹரீஷ் கல்யாண், இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி.
இயக்குநருக்கு பரிசு: ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன், அது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது. மேலும் இப்படி ஒரு வெற்றிப்படத்தில் நடிக்க தன்னை தேர்வு செய்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் ஒன்றை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











