சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் அடுத்த தமிழ் நடிகர்!
வடகறியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிகர் ஜெய் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு பரபரப்பு கிளப்பினார்கள் அல்லவா...
அடுத்து கோடம்பாக்கத்தில் பல நடிகர்களும் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என சன்னி லியோனுக்கு தூதுவிட, இப்போது அவர் மேலும் ஒரு படத்தில் முக்கால் நிர்வாணமாக ஆட ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

பரோட்டாவுக்கு செம சால்னா..
ஆனால் அவருடன் ஆடும் வாய்ப்பு, யாரும் எதிர்ப்பார்க்காத பரோட்ட சூரிக்குக் கிடைத்தது பலரின் வயிற்றுக்குள் அடுப்பு மூட்டி இருக்கிறதாம்!
விமல், சூரி மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில்தான் சன்னி லியோன் கவர்ச்சிக் குத்தாட்டம் போடவிருக்கிறார்.

நட்ட நடு ரோட்டில்..
இந்தப் படத்தில் நடிகர் சூரி ஹைவேஸ் ஒன்றில் ஒரு கவர்ச்சிப்பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த குத்தாட்டத்திற்கு புகழ்பெற்ற நடிகை ஒருவர் ஆடினால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குநர் கண்ணன், தயாரிப்பாளருடன் ஆலோசனை செய்து சன்னி லியோனை ஒப்பந்தம் செய்தார்.

ரூ 35 லட்சம்
இந்தப் பாடலுக்கு ஆட சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாக கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம் (ரூ 40 லட்சத்து பலே நடனமே ஆடக்கூடியவராயிற்றே அம்மணி!).

நெடுஞ்சாலை செட்
இந்தப் பாடலுக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தேசிய நெடுஞ்சாலை போன்ற செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சன்னி லியோன் நடனமாடும் இந்த குத்துப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைக்கின்றார்.

மேலும் 3 படங்கள்..
வடகறி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களைத் தொடர்ந்து மேலும் 3 படங்களுக்கு சன்னியிடம் பேசி வருகின்றனர். இவற்றில் ஒன்றில் சன்னியை இரண்டாவது நாயகியாக நடிக்கக் கேட்டுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











