விஜய் ரசிகர்களால் பாராட்டும் பராசக்தி! சுதா கொங்கரா படம்னா சும்மாவா.. காலரை தூக்கி விடுங்க மேடம்!
சென்னை: பராசக்தி படம் சுதா கொங்கரா இயக்கத்திலும், சிவகார்த்திகேயன் நடிப்பிலும் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜயின் ஜன நாயகனும் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் தான் ரசிகர்களை சந்திப்பதாக இருந்தது. ஜன நாயகனுக்கு சென்சார் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், ஜன நாயகன் ஜகா வாங்கியது. பராசக்தி படமும் ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு மோதுவதால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை மிகவும் மோசமாக விமர்சித்தனர். சில யூடியூபர்கள் மோசமாக விமர்சித்ததை எல்லாம் கூட பார்க்க நேர்ந்தது. ஆனால் படம் வெளியான பின்னர் விஜய் ரசிகர்களே படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதை பார்க்கவும் முடிகிறது.
அதாவது படம் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும், " படம் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக இருந்தது. இந்த அளவுக்கு படம் இருக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. விஜய் ரசிகராக ஒன்று சொல்லுகிறோம், நல்லவேளை இரண்டு படங்களும் ஒன்றாக வரவில்லை. பராசக்தி படம் ரொம்பவும் நன்றாக உள்ளது. ஜன நாயகன் படம் விஜய் அண்ணாவுக்காக என்று வரவுள்ளது. அதை வரவேற்க தயாராக தான் உள்ளோம்.

அரசியல் வேறு: பராசக்தி தனியாக வந்தது என்பது பராசக்தி படத்திற்கான தனித்துவம் இருக்கும் என்று தோன்றுகிறது. சுதா கொங்கரா தனது இயக்கத்தில் படத்தை மிரட்டலாக எடுத்துள்ளார். விஜய் ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளார்கள், அவர்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். படம் தவெகவை டேமேஜ் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் தவெக செய்ய கூடிய அரசியலுக்கும் படம் பேசும் அரசியலுக்கும் சம்மந்தமே இல்லை" என்று பேசி உள்ளார்கள். அதேபோல் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் பலரும் டிவிகே என்றும் தளபதி என்றும் கத்துவதைப் பார்க்க முடிந்தது.
சுதா கொங்கரா: அதே நேரத்தில் படத்திற்கு விஜய் ரசிகர்கள் கொடுத்து வரும் விமர்சனம் என்பது படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. குறிப்பாக சுதா கொங்கராவின் ரசிகர்கள், சுதா தயாரிச்சா தரமா தான் இருக்கும் என்று பதில் சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் சில விஜய் ரசிகர்கள், பராசக்தி டிசாஸ்டர் என்றும் ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











