சீதா பார்த்திபனை இணைத்து பார்க்கும் மகள்.. அடுத்தடுத்து புகைப்படங்களால் கலர்ஃபுல்லான இன்ஸ்டாகிராம்!

சென்னை: நடிகர் பார்த்திபன் புதிய பாதை படம் மூலம் தன்னை நடிகராகவும் இயக்குநராகவும் வெளிப்படுத்தியவர். இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் சில ஆண்டுகளில் இவர்கள் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

மூத்த மகள் கீர்த்தனா மற்றும் இரண்டாவது மகள் அபிநயா இருவருக்கும் திருமணமாகி செட்டில் ஆகி உள்ளனர்.இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள அபிநயா, தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

parthiban seetha abhinaya


பார்த்திபன் & சீதா: இயக்குநர் பார்த்திபன் புதிய பாதை படம் மூலம் தன்னை சிறப்பான இயக்குநராகவும் நடிகராகவும் வெளிப்படுத்தியவர். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மூத்த மகள் கீர்த்தனா மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார். அவர் இயக்குநராகும் கனவோடு கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பதாக முன்னதாக பார்த்திபன் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இரண்டாவது மகள் அபிநயாவிற்கும் நரேஷ் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

பார்த்திபன் மகள் அபிநயா: அபிநயாவின் கணவர் தொழிலதிபராக இருக்கும் நிலையில் அபிநயா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருவரும் பிரிந்த போதிலும் தங்களது மகன் மற்றும் மகள்கள் மீது மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.

பார்த்திபன் வருத்தம்: பார்த்திபன் மற்றும் சீதா வெறுப்பை காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து இணக்கமான உறவை மெயின்டெயின் செய்து வருகின்றனர். தற்போது இருக்கும் மெச்சூர்ட்னஸ் சீதாவை பிரியும்போது தனக்கு இருந்திருந்தால், அவருடைய விருப்பத்தை தான் பூர்த்தி செய்து இருப்பேன் என்று பார்த்திபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இருவருமே சினிமாவுடன் தங்களை தொடர்ந்து தொடர்பு படுத்தி வருகின்றனர். பார்த்திபன் அடுத்தடுத்து படங்களை இயக்குவதிலும் நடிப்பதிலும் பிஸியாக காணப்படுகிறார்.,றது சீதாவும் அடுத்தடுத்து டிவி தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் தன்னை இணைத்து வருகிறார்.

பிசியான சீதா & பார்த்திபன்: youtube சேனல் ஒன்றை சீதா நடத்திவரும் சூழலில் அடுத்தடுத்து கார்டனிங்கில் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருவதை காணமுடிகிறது. இதை மையப்படுத்தி இவரது வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்களின் ஏராளமான வியூஸ்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அபிநயா இவர்கள் இவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், அதற்கான சாத்தியத்தை காலம்தான் உறுதி செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X