Parthiban: லைகா ரெய்டுக்கு காரணமே பார்த்திபன் தான்... போட்டுக் கொடுத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக வெளியானது.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

பொன்னியின் செல்வன் 2 வெளியான சில தினங்களில் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது.

திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பார்த்திபன் தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

 Parthiban: Bayilvan Ranganathan said that Parthiban was responsible for the IT raid at Lyca

பார்த்திபனை சிக்க வைத்த பயில்வான் ரங்கநாதன்: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. முன்னதாக இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் ரிலீஸானது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 1000 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படம் உருவானது முதல் ரிலீஸாகும் வரை ப்ரொமோஷனுக்காக மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்தது லைகா. அதேபோல், படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கியது. ஆகமொத்தம் படத் தயாரிப்பு மட்டுமே 500 கோடி பட்ஜெட் என சொல்லப்படுகிறது.

அதேநேரம் பொன்னியின் செல்வன் மட்டும் இல்லாமல் ரஜினி, கமல், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் திடீரென லைகா நிறுவனங்களில் ஐடி சோதனை நடைபெற்றது. திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

 Parthiban: Bayilvan Ranganathan said that Parthiban was responsible for the IT raid at Lyca

அதன்படி, லைகா நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டுக்கு காரணம் நடிகர் பார்த்திபன் தான் காரணம் எனக் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், லைகா தலைவர் சுபாஸ்கரனை பாராட்டுவதாக நினைத்து, அவர்களின் வருமானம், படத் தயாரிப்பின் பட்ஜெட் போன்றவைகளை வெளிப்படையாக பேசினார். இதனை குறிப்பிட்டே பார்த்திபன் தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

ஜெய் ஆகாஷ் நடித்துள்ள யோக்கியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசியுள்ளார். வழக்கமாக பார்த்திபனுக்கும் ப்ளு சட்டை மாறனுக்கும் தான் பிரச்சினை வரும். ஆனால், இந்தமுறை பயில்வான் ரங்கநாதன் நடிகர் பார்த்திபனை தேவையில்லாமல் கோர்த்துவிட்டுள்ளார். ஆனாலும் இதுகுறித்து பார்த்திபன் இன்னும் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X