2020 குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.. அடுத்த பட அறிவிப்பு.. வாழ்கிறார் பார்த்திபன்!

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2020 குழந்தைகளுக்கு உணவு, பரிசு பொருள் வாங்கி கொடுத்து பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

மேலும், தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விமர்சக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால், வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. ஒத்த செருப்பு திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்காத பலரும் நெட்பிளிக்ஸில் அந்த படம் வெளியான பிறகு மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் அளித்தனர்.

இந்நிலையில், தற்போது அடுத்த முயற்சியில் இயக்குநர் பார்த்திபன் இறங்கியுள்ளார். 'இரவின் நிழல்' என்ற வித்தியாசமான டைட்டிலை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2020 குழந்தைகளுடன்

2020 குழந்தைகளுக்கு பரிசு வழங்கி, பிரியாணி உடனமர்ந்து உண்டு குதூகலமாய் பார்த்திபன் தனது 2020 புத்தாண்டை அர்த்தமுள்ளதாக கொண்டாடியுள்ளார்.

இரவின் நிழல்

ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பல விருது மேடைகளை சந்தித்து பாராட்டுக்களை பெற்றுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு இரவின் நிழல் என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்றும் அவர் குறிப்பிட்ட்டுள்ளார்.

காமெடி படமா? பேய் படமா?

பார்த்திபன் மற்றும் வடிவேலு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலானது. பார்த்திபனின் அடுத்த படம் காமெடி படமாக வரும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இரவின் நிழல் என்ற டைட்டில் பேய் படமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

பிள்ளையார் சுழி

புதுமுயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடும் புதுமைப் பித்தன் பார்த்திபன் சாரின் இரவின் நிழல் பல திரை நிழல்களுக்கு வழிவகுக்க வாழ்த்துக்கள் என பார்த்திபன் சார் போலவே வாழ்த்த இந்த ரசிகர் ட்ரை பண்ணியுள்ளார்.

வடிவேலு இருக்கிறாரா?

இரவின் நிழல் படத்தில் பார்த்திபனுடன் நடிகர் வடிவேலு இருக்கிறாரா என்பதையே பலரும் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.

தல அஜித்த வச்சி படம் பண்ணுங்க

இயக்குநர் பார்த்திபன் உதவி இயக்குநரான எச். வினோத், தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை என படங்களை இயக்கி வருகிறார். நீங்களும் சீக்கிரம் தல அஜித்தை வைத்து ஒரு படம் எடுங்க என இந்த ரசிகர் மிகவும் உரிமையோடு கமெண்ட் செய்துள்ளார்.

சரிந்தாலும் உடையாத

எத்தனை முறை தோல்விகளை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் பார்த்திபன் சார் நல்ல படைப்புகளுடன் வருகிறார் என்பதை, சரிந்தாலும், உடையாத, சாய்ந்தாலும் வீழாத, உண்மையில் சாயம் வெளுக்காத உயரிய நிழல் இரவின் நிழல் என இந்த ரசிகர் கவிதையாகவே கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X