அறுந்து விழுந்த கிரேன்.. கனவு தகர்ந்த மூவர்.. இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து.. பார்த்திபன் இரங்கல்

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்து, தமிழ் சினிமாவுக்கே கருப்பு நாளாக அமைந்துள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 9 பேர் காயங்களுடன் அருகில் உள்ள சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

3 பேர் பலி

3 பேர் பலி

கிரேன் அறுந்து விழுந்த விபத்தில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஷங்கரின் பி.ஏ., மது (வயது 29), புரொடக்‌ஷன் பணியில் இருந்த சந்திரன் (வயது 60) மற்றும் மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (வயது 34) பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

9 பேர் காயம்

9 பேர் காயம்

மேலும், மன்சங் (37), வாசு (35), ரம்ஜான் (43), அருண் பிரசாத் (24), குமார் (52), கலை சித்ரா, குணபாலன், திருநாவுக்கரசு (45) மற்றும் முருகதாஸ் (40) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் பூந்தமல்லி அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிர் தப்பிய ஷங்கர்

உயிர் தப்பிய ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் அமர்ந்து பார்க்கும் மானிடர் ரூமில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் அந்த இடத்தின் அருகே இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஷங்கருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்திகள் மறுக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்தது எப்படி

விபத்து நடந்தது எப்படி

ராட்சத கிரேனில், அதிக எடை கொண்ட லைட்டுகளை கட்டி, சண்டை காட்சிகளை படமாக்கி வந்துள்ளனர். நேற்று இரவு, சண்டை காட்சிக்காக கிரேனை தயார் செய்து வைத்திருந்த போது, அதிக எடை காரணமாக அதன் கம்பி அறுந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருப்பு நாள்

கருப்பு நாள்

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் பலியானவர்களின், இழப்புகளை ஈடு செய்ய முடியாது என நடிகர் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா தங்களது இரங்கலை தெரிவித்துள்ளன. மேலும், ட்விட்டரில் #Indian2, #KamalHaasan, #Shankar என பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்களும், பொதுமக்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கனவு தகர்ந்த மூவர்

கனவு தகர்ந்த மூவர்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த எதிர்பாராத விபத்தால், மூன்று பேரி பரிதாபமாக பலியான செய்தி அறிந்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், "அறுந்து விழுந்த கிரேன், கனவு தகர்ந்த மூவர். ஆனால் அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும்,திரு சங்கரும், கமல் சாரும் நிலைக் குலைந்தே போயிருப்பார்கள்.RIP!" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X