செயலில் காட்டுங்கள் பார்த்திபன்.. இதெல்லாம் எடுபடாது.. விட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் பார்த்திபன். இதுவரை அவர் இயக்கியிருக்கும் ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் வந்திருக்கின்றன. இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார். சூழல் இப்படி இருக்க கடந்த சில வாரங்களாகவே பார்த்திபனை சுற்றி பெரும் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் திரிஷாவை பற்றி பேசி மாட்டினார். அதற்கடுத்ததாக பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் பட விழாவில் சாதி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இயக்குநராகவும், நடிகராகவும் ஜொலித்துவரும் பார்த்திபன்; நன்றாக பேசக்கூடியவரும்கூட. எந்த மேடையில் ஏறினாலும்; அங்கே தனது வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி அந்த மேடையை தனதாக்கிக்கொள்பவர். இதனால் அவரது குறும்புத்தனமான பேச்சை பலர் பல சமயங்களில் ரசித்ததுண்டு. அதேசமயம் அவருக்கு இப்போது அந்த விஷயமே பிரச்னையாக மாறிவிட்டது. முதலில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், திரிஷா பற்றி பேசுகையில், 'குந்தவையை வீட்டிலேயே குந்த வையுங்கள். எந்தப் பிரச்னையும் வராமல் இருப்பதற்கு' என பேசினார்.

Parthiban Controversy Blue Sattai Maran Slams No Caste Certificate Statement
Photo Credit:

திரிஷாவின் கண்டனம்: விஜய்யுடன் ஒன்றாக வந்ததால் திரிஷாவை அப்படி பேசினார் அவர். அதனை பார்த்து கடுப்பான திரிஷா; உடனடியாக பார்த்திபனுக்கு கடுமையான பதிலடியை கொடுத்திருந்தார். அதனையடுத்து வருத்தம் தெரிவித்த பார்த்திபன்; திரிஷாவுக்கு எதிராக தொடர்ச்சியாக வீடியோக்களை இறக்கிக்கொண்டே இருந்தார். இனிமேலும் இந்த விஷயத்தை பிடித்துக்கொண்டிருப்பது நல்லது இல்லை என முடிவு செய்து; அதை பற்றி பேசுவதையோ, வீடியோ போடுவதையோ நிறுத்திவிட்டார்.

பார்த்திபனுக்கு அடுத்த சிக்கல்: திரிஷா பிரச்னை முடிந்த கையோடு இன்னொரு பிரச்னை அவருக்கு வந்தது. அதாவது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் பட விழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற பார்த்திபன், "நான் ஒரு நாயுடு பையன். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கை நன்றாக பேசும்படி கற்றுக்கொள்வேன். இது சத்தியம்" என கூறியிருந்தார். அதை பார்த்த தமிழ்நாட்டு ரசிகர்களோ எதற்காக இப்படி சாதியை தூக்கி பிடிக்க வேண்டும் என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்கள்.

Also Read
சங்கீதாவுடன் விஜய்க்கு திருமணம் தோல்வி இருக்கட்டும்.. ஏற்கனவே காதல் தோல்வி தெரியுமா?.. தளபதி பாவம்தான்
சங்கீதாவுடன் விஜய்க்கு திருமணம் தோல்வி இருக்கட்டும்.. ஏற்கனவே காதல் தோல்வி தெரியுமா?.. தளபதி பாவம்தான்

பார்த்திபனின் வீடியோ: அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார்.மேலும் தனக்கு சாதியே பிடிக்காது என்றும்; அந்த மேடையில் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கமளித்தார். ஆனால் அவரை பலரும் விடுவதாக இல்லை. சூழல் இப்படி இருக்க திடீரென புதிய வீடியோவை களமிறக்கினார். அந்த வீடியோவில் சாதி இல்லை, மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப்போவதாக கூறியிருக்கிறார். மேலும், இப்படி சான்றிதழ் வாங்கும் முதல் ஆள் நான்தான். அந்த விஷயத்தில் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டும் யாரும் விடுவதாக இல்லை என பல விஷயங்களை தெரிவித்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பார்த்திபனை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் இவ்வாறு சான்றிதழ் பெறுவதாக முயற்சிப்பதை குறிப்பிட்டு "சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். சாதி பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும்.. பிறகு வருத்தம் மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது" என்று விளாசியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X