கேப்மாரி ட்ரெயிலரை பார்த்து படு பங்கமாக விமர்சித்த பார்த்திபன்.. வேற லெவல்!
சென்னை: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேப்மாரி படத்தின் ட்ரெயிலரை பார்த்து படு பங்கமாக விமர்சித்திருக்கிறார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.
இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தற்போது வரை படங்களை இயக்கி வருகிறார். முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி, நடிக்கவும் செய்கிறார். தற்போது 74 வயதை கடந்துள்ளது எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஏசி என்றும் திரைத்துறையினரால் அழைக்கப்படுகிறார்.

70வது படம்
தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஜயின் அப்பாவான எஸ்ஏசி தனது 70வது படமாக கேப்மாரி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படியும் பெயரா?
இந்த படத்தின் பெயரை அறிவித்தபோது பெரும் விமர்சனம் எழுந்தது. கேப்மாரி என்றெல்லாமா பெயர் வைப்பது என கேள்விகள் எழுந்தன.

இப்படியா படம் எடுப்பது?
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், அரசியலுக்கு வரவும் முதல்வர் ஆகவும் ஆசைப்படும் வாரிசின் தந்தை இப்படியா படம் எடுப்பது என நொந்துக் கொண்டனர்.

மாமியாருக்கு சோப்பு
இயக்குநர் சந்திரசேகரையும் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மாமியாரின் முதுகில் மருமகனை சோப்பு போட வைப்பது போல் படம் எடுத்தவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என விளாசினர்.

படுக்கையறை காட்சிகள்
காரணம்.. அந்தளவுக்கு ட்ரெயிலர் முழுக்க பீப் சத்தம் போடும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களும் ப்ளர் செய்யும் அளவுக்கு படுக்கையறை காட்சிகளும் இருந்ததுதான். நடிகர் ஜெய், இரண்டு நாயகிகளுக்கும் மாறி மாறி லிப் லாக் கொடுப்பது, அதைவிட்டால் படுக்கையறை என படு மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பார்த்திபன் பங்கம்
இந்த ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் 74 வயதில் இப்படி ஒரு படம் தேவையா என விளாசி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், கேப்மாரி ட்ரெயிலர் குறித்து தனது ஸ்டைலிலேயே பங்கமாக விமர்சித்திருக்கிறார்.
இளமை லேகியம்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எஸ்ஏசி-சிஎம் ஆகி செக்ஸ் பற்றியும் லைஃப் பற்றியும் கடல் அளவு டீப் ஆக அலசி, ஜெய்'க்க தன் 'மன வய'தில்'உள்ள குளிர் சாதன குட்டிகளை வைத்து 'புள்ளைங்கோ' நெஞ்சில் டெம்ப்ரேட்ச்சரை அதிகப்படுத்துகிறார். உ'தட்டில் 'கேப்' இல்லாமல் மாறி 'மாரி'இட்டு நிரப்புகிறார் இளமை லேகியத்தை 'ஏ' " இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.
நல்ல நக்கல்..
பார்த்திபனின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள், என்ன பார்த்திபன் சார் கால்ல விழுந்த மனுசன இப்படி காலால உதைக்கிறிங்ககக.... இருந்தாலும் நல்ல நக்கல் என தெரிவித்துள்ளனர்.
ஓப்பனாவே கலாய்ச்சுட்டீங்க
என்ன சார்... இப்படி ஓப்பனாவே கலாய்ச்சுட்டீங்க.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











