20 வருஷமா அந்த நாற்காலியைத்தான் கும்பிடுறேன்.. பாக்யராஜ் மறைவால் உடைந்த பார்த்திபன்!
சென்னை: இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பல திறமைகளுக்கு சொந்தக்காரரான கே. பாக்யராஜ் ஜூன் 27ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு, இரவு வீடு திரும்பிய அவர், ஜூன் 27ஆம் தேதி வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரது பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினார்.
பாக்யராஜ் மரணம்: இதையடுத்து அவருடைய உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதல் விஜய், அரசியல் கட்சியை தலைவர்கள், திரை பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் வந்து மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். பாக்யராஜ் இறந்த செய்தி கேட்டதுமே மீளா துயரத்திற்கு சென்ற இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், பாக்யராஜின் குடும்பத்தில் ஒருவாக இருந்து ஆரம்பத்தில் இருந்து இறுதி சடங்கு முடியும் வரை அங்கேயே அவரது பாதத்தின் கீழ் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து முடித்தார். தனது ஆசான குருவான பாக்யராஜை இழந்து தவிக்கும் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் உருக்கம்: அதில், என் குருவின் இறுதி யாத்திரையின் போது.... என்னிடம் மைக் நீட்டியவர்களிடம் "இங்கு வேண்டாம் ,அமைதியாக ஒத்துழையுங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கிறேன்" என்று கூறியதால் ஒரே நேரத்தில் பல பதிவானது. நான் பேட்டி கொடுக்காததில் பலருக்கு வருத்தம்.
நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள்.
என்ன செய்வது? பகிராவிட்டாலும் ....
"நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்"
நிற்காதே மனம். சற்று அழுது ஓயட்டும்.
கடந்த 20 வருடங்களாக என் குருவின் புகைப்படத்திற்கு பதில் ஒரு இயக்குனர் நாற்காலியை தொட்டு வணங்கி வேலையைத் தொடங்குவேன்.
அதாவது உருவம் தவிர்த்தே அவரை தொழுதேன்
இப்போது அதுவே விதியாய் .... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications