இது ரொம்ப ஓவர்.. ப்ளூ சட்டை மாறன் உருவபொம்மை எரிப்பு.. ரசிகர்கள் அட்ராசிட்டி!
புதுச்சேரி : நான் லீனியர் சிங்கிள் ஷாட் மூலம் எடுக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது இரவின் நிழல் படம்.
Recommended Video
டைரக்டர் பார்த்திபன் இந்தப் படத்தில் நடித்து இயக்கியும் உள்ளார். இந்தப் படம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்று முன்னதாக பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல் படம்
நடிகர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் இரவின் நிழல். இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்தப் படம் ஆஸ்கார் விருது விழாவிலும் திரையிடப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பாக ஓடி வருகிறது. வசூலும் சிறப்பாக காணப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இந்நிலையில் ஒவ்வொரு புதிய படத்தின்போதும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று நினைத்திருந்ததாகவும் ஆனால் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இதற்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இரவின் நிழல் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரசிகர்கள் கோபம்
இவரது இந்த கமெண்ட் பரவலாக அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அவர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ரசிகர்கள் ஒருபடி மேலே போய் அவரது உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

உருவ பொம்மை எரிப்பு
புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ப்ரோவிடண்ட் மால் திரையரங்கில் படம் பார்த்த புதுச்சேரி நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் திரையரங்க வாயிலில் படம் குறித்து மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

ரசிகர்கள் சவால்
தொடர்ந்து அவரது உருவ பொம்மைக்கு தீயிட்டு எதிர்த்தும் காலால் உதைத்தும் கண்டனம் தெரிவித்தனர். ஒவ்வொரு படத்தையும் மோசமாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறனால் ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடியுமா என்றும் அவர்கள் சவால் விட்டனர். அதற்கு ஏற்றாற்போல அவர் ஒரேயொரு படம்தான் இயக்கியுள்ளார். அதுவும் வந்த தடம் கூட தெரியாமல் பெட்டியில் முடங்கியது.


Click it and Unblock the Notifications











