For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “நீர் பாத்திரத்துடன் ஒன்றி..அதன் வடிவத்தை அடைவது போல்“ ..ஜோதிகாவை புகழ்ந்து பார்த்திபன் கவிதை !

  |

  சென்னை : பொன்மகள் வந்தாள் படத்தையும், அதில் ஜோதிகாவின் நடிப்பையும் புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.

  Surya & Jothika Live together • Injury • Ponmagal Vandhal • Soorarai Pottru

  அனைவராலும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று அதிகாலை 12 மணிக்கு அமேசான் ப்ரைம் என்ற OTT பிளாட்பார்மில் வெளியிடப்பட்டது. பல கருத்துக்கள் படத்தை பற்றி வந்து கொண்டே இருந்தாலும் படத்தை பார்க்காதவர்கள் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர்.

  படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதைகாத்திருந்து பார்த்த அனைவரிடமும் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுகளும் நிறைய நல்ல விமர்சனங்களும் ஒரு பக்கம் வந்து கொண்டு இருக்கையில் பிரபலங்களும் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் பார்த்திபன் என்றாலே கவிதைக்கு பஞ்சம் இல்லை. குறும்புத்தனம் கலந்த சொற்களுடன் தன்னுடைய ஸ்டைல் மாறாமல் ஜோதிகாவை பாராட்டி ஒரு கவிதை எழுதி உள்ளார் .

  பொருள்கோடி தந்தாள்

  பொருள்கோடி தந்தாள்

  சில நாட்களாக முனுமுனுக்கப்படும் ஒரு படத்தின் பெயர் தான் பொன்மகள் வந்தாள், தமிழில் முதன் முதலில் நேரடியாக OTTல் வெளியிடப்படும் முதல் படம் இது என்ற பெருமையை பெற்றுள்ளது. இதை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜோதிகா, R பார்த்திபன் , பாக்கியராஜ் , பிரதாப் போத்தன், தியாக ராஜன் மற்றும் பாண்டியராஜன் என 5 இயக்குனர்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியானது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஜே.ஜே ஃப்ரிட்ரிக் இயக்கியுள்ளார்.

  கவிதையில் பாராட்டு

  கவிதையில் பாராட்டு

  இந்நிலையில் இந்த படத்தில் ஒரு வழக்கறிஞராக நடித்திருந்த R.பார்த்திபன் பொன்மகளுக்காக ஒரு கவிதை எழுதியுள்ளார். கவிதை தொடங்கும் போதே " நீர்.. பாத்திரத்துடன் ஒன்றி அப்பாத்திரத்தின் வடிவத்தை அடைவது போல்... நீர் இப்படத்தில் பாத்திரமாகவே அதுவும் பத்திரமாகவே (கொஞ்ச நழுவினாலும் உடையக்கூடிய கண்ணாடிப் பாத்திரம்).. என்று நீர் என ஜோதிகாவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு எழுதிய இந்த கவிதை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அடடா என உச்சு கொட்ட வைத்திருக்கிறது. ரசனையுடன் ரசித்து ரசித்து எழுதி உள்ளார் பார்த்திபன். நிறைய கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் வந்த வண்ணம் உள்ளது .

  OTTக்கு புது விளக்கம்

  OTTக்கு புது விளக்கம்

  நமக்கு தெரிந்து OTT என்றால் ஓவர் தி டாப் (Over the top) , ஆனால் இந்த கவிதையின் மூலம் பார்த்திபன் இதற்க்கு புது விளக்கமே கொடுத்துள்ளார். அதில் படத்தை வெளியிட்ட OTT அமேசான் ஆக இருக்கலாம். நடிப்பை வெளியிட்ட ஜோதிகா அமேசிங் என்றும். Oppatra(ஒப்பற்ற) Thaniththuvamaana (தனித்துவமான) Thiramai (திறமை) என OTT க்கு புதிய விளக்கத்தை கொடுத்து அசத்தியுள்ளார் நம்ம பார்த்திபன்.

  நடிகையர் திலகம்

  நடிகையர் திலகம்

  நடிகர் திலகம், நடிகையர் திலகம், நடிப்பின் இலக்கணம் இப்படி இன்னும் சில பல இருப்பினும் அவை அனைத்தையும் உருக்கி ஒரு பொன் கேடயமாக்கி, கதா பாத்திரமாகவே சதாக்ஷனமும் வாழ்ந்திருக்கும் எங்கள் ஜோ-வுக்கு "ஜே ஜே" சொல்லி , வாழ்த்தலாம். என இந்த படத்தின் ஹீரோவாக நடித்த ஜோதிகாவை தனது பாணியில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

  பெரும் எதிர்பார்ப்பு

  பெரும் எதிர்பார்ப்பு

  ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்கும் அதே வேளையில் இந்த படம் இப்போது வெளியாகி இருப்பதால் பல தரப்பினரும் இந்த படத்தை தங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். சிலர் எப்படி பார்ப்பது என்று ஆராய்ந்து வருகின்றனர் . இணையத்தளம் என்றால் எனக்கு ஆகாது , தெரியாது என்று சொன்னவர்கள் கூட இப்படத்தை பார்க்க ஆர்வடமுடன் உள்ளனர். கம்ப்யூட்டர் மூலமாகவும் செல் போன் மூலமாகவும் தேட ஆரம்பித்து விட்டனர். படத்தின் வெற்றி என்பது வெளியீடு மட்டும் அல்ல வெளியிடும் நேரம் காலம் மிக முக்கியம் என்று பலர் சொல்லுவார்கள். அதை சரியாக புரிந்து கொண்டு பொன்மகள் வந்தாள் பலர் வீட்டின் உள்ளே எளிதாக சென்றுவிட்டாள்.

  English summary
  Parthiban has written a poem praising Jyothika's performance in the film 'Ponmagal Vandhal‘
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X