பார்த்திபன் நெற்றியில் காயம்.. டி. இமான் கூட யாரு இருக்காங்க பாருங்க.. செம போஸ்ட்!
சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து அடுத்து பார்த்திபன் இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் இசையமைப்பாளராக டி. இமான் இணைந்துள்ள நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கில் அடிபட்டு தனது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பார்த்திபன் ட்வீட் போட்டுள்ளார்.
மேலும், இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் தனது பங்கை கொடுத்து எங்கள் அணியை வலுவாக்கி உள்ளார் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
டி. இமான் இசையில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் மேலும், சில சர்ப்ரைஸ் இருக்கு என்றும் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் உடன் சண்டை: இசையமைப்பாளர் டி. இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை வெடித்த நிலையில், புதிய படங்களில் கமிட் ஆவாரா? என்கிற கேள்வி கிளம்பி இருந்தது. உடனடியாக பார்த்திபன் தனது படத்தில் இசையமைக்க டி. இமானை ஒப்பந்தம் செய்துக் கொண்டு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இமான் இசையில் ஸ்ருதிஹாசன்: பார்த்திபன் படத்தில் டி. இமான் இசையமைத்துள்ள ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். பார்த்திபன் அருகே ஸ்ருதிஹாசன் மற்றும் டி. இமான் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நெற்றியில் காயம்: பார்த்திபன் தனது புதிய படத்தின் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சிறிய விபத்தில் சிக்கி தனது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பதிவில் புரியும் படி பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் போட்ட போஸ்ட்: "ஸ்ருதியை மீறி, பூங்கொத்தை மீறி, என் நெற்றி காயத்தை கவனித்து விசாரித்தவர்களுக்கு நன்றி! படம் நெத்தியடியா வரனும்னு மண்டைய உடைச்சுகிட்டு யோசிச்சதுல பட்ட காயமதுன்னு ஜாலியா சொல்லாம, பருவோ மருவோ அதை remove செய்ய ஒரு குட்டி surgery! 4 தையல் போட்ட ஒரு தையல்கிட்ட (பெண் டாக்டர்) "நீங்க படிச்சி முடிச்சதும் tailoring-ங்கும் வேறே கத்துகிட்டீங்களா?" என கேட்க வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே" சும்மாயிருங்க சார் குத்திடப் போறேன். " என்றார்.
இப்போதைக்கு ஒரு பாடலின் போதைக்கு ஸ்ருதி ஒரு பாடல் மட்டும் பாட வந்தார் but பின் என்ன நடந்தது. அது நாளை.... Good night" என போஸ்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











