உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் பார்த்திபன் காதல்!

Recommended Video

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் பார்த்திபன் காதல்!- வீடியோ

சென்னை: உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'பார்த்திபன் காதல்' திரைப்படம் முழுக்க முழுக்க காதலைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் வள்ளிமுத்து தெரிவித்துள்ளார்.

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பார்த்திபன் காதல்'. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வள்ளிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

Parthiban Kadhal is a full length love movie

புதுமுகங்கள் யோகி, வர்ஷிதா ஆகியோர் கதையின் நாயகன் அற்றும் நாயகியாக அறிமுகமாகிறார்கள். தங்கையா மாடசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பில்லா இசையமைக்க, S.குமரேசன் - ஜோ ஜார்ஜ் ஆகியோர் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளனர்.

படக்குழுவினர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் வள்ளிமுத்து, 'பார்த்திபன் காதல்' ஒரு முழுநீள காதல் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Parthiban Kadhal is a full length love movie

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, " கோவில்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக பார்த்திபன் கனவு படம் உருவாக இருக்கிறது. அது என்ன சம்பவம் என இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக வருகிறார்.

Parthiban Kadhal is a full length love movie

சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் சூழலில் " பார்த்திபன் காதல் " ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது" என இயக்குனர் வள்ளிமுத்து தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X