Karur Stampede: கரூரில் எங்கும் மரண ஓலம்... பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அழைத்து சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டையே உலுக்கி இருக்கும் இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பார்த்திபனின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின். 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி, (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி 'கொடுத்து வைத்தவர்கள்' ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனை செய்கிறேன்: நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் எனபதிவிட்டுள்ளார்.
மனமார்ந்த இரங்கல்: நடிகர் ரவி மோகனின் விடுத்த இரங்கல் செய்தியில், கரூரில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். இந்த வேதனையான நேரத்தில், அவர்களைத் தாங்கிக் கொள்ள வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறோம், நீதி அதன் பாதையைக் கண்டுபிடிக்கும், நியாயம் அசைக்கப்படாமல் இருக்கும். ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
மம்முட்டி இரங்கல்: அதே போல, இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் மம்முட்டி, தனது எக்ஸ் தளபக்கத்தில், கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மோகன்லால் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூரில் நடந்த சம்பவம் துன்பமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன் என மோகன்லால் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











