கமல் என்ற நூலகத்தில் நானுமொரு நூலாய்... பரவசத்தில் நடிகர் பார்த்திபன்
சென்னை: நடிகர் பார்த்திபன் வித்தியாசத்துக்கு பேர் போனவர். பட வெளியீட்டு விழா, பட துவக்க விழா மட்டுமில்லை.. ஒரு பரிசு பொருள் கொடுத்தாலும் அது வித்தியாசமா இருக்கும்.
நம்ம கமல்ஹாசன் இருக்காரே அவர் வித்தியாசமாக நடிப்பதில் வல்லவர். இரு வித்தியாசங்களும் இன்று சந்தித்து இருக்காங்க.

பார்த்திபன் கமல்ஹாசனை சந்தித்து 50 ஸ்பீச்சஸ், யாதி என்று தான் எழுதிய இரண்டு புத்தகங்களை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கார்.
ஒத்த செருப்பு சைஸ் 7 என்கிற படத்தை சினிமாவுக்காக அர்ப்பணிக்க இருக்கேன்னு ரெண்டு நாளைக்கு முன்னால பேசி இருந்தார். இந்த சினிமாவுக்கு வர்றதுக்கு நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன்.
மூணு நாள் கூட நான் சாப்பிடாம இருந்திருக்கேன். அவ்ளோ கஷ்டப்பட்ட என்னை இந்த சினிமா வாழ வச்சிருக்கு.இந்த சினிமாவுக்காக நான் ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டு இந்த படத்தை எடுக்கறேன்னு சொல்லி இருந்தார்.
இந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தான் எழுதிய இரண்டு புத்தகங்களை அவருக்கு வழங்கிய போட்டோவை போட்டு தன் ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், கமல் என்ற நூலகத்தில் நானுமொரு நூலாய் .. என்று எழுதி இருக்கார்.அதோடு ஒரு மூலையில் பேச்சுக்'களை" நீக்கும் செயல் மய்யன் கமலஹாசன் அவர்களுக்கு காதலுடன்,இவன் பார்த்திபன் என்று எழுதி உள்ளார்.
இன்னொரு மூலையில் யாதிலும் யதி காணும் கமல்ஹாசன் அவர்களுக்கு, இவன் பார்த்திபன் என்றும் எழுதிய படத்தை ட்வீட்டரில பதிவிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











