ஒரே குழப்பமா இருக்கே… ஒத்த செருப்பு சைஸ்7 ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்... பார்த்திபன் ட்வீட் !

சென்னை : ஒத்த செருப்பு சைஸ்7 ஹந்திக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இயக்குனர் பார்த்திபன் கேட்டுள்ளார்.

ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருக்கும் இந்தப் படம் உலகின் முதல் முயற்சி, இந்தியாவின் மிக முக்கியமான முயற்சி இதுவாகும்.

இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், நடிப்பவரே எழுதி இயக்கியிருப்பது இதுவே முதல் முறையாம்.

ஒரே ஆளாக

ஒரே ஆளாக

இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்த திரைப்படம் ஒத்தசெருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயாஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்து இருந்தார்.

பல விருதுகள்

பல விருதுகள்

ஒரு நபரே எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது.

பெரிய உற்சாகம்

பெரிய உற்சாகம்

மேலும், 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை ரசூல் பூக்குட்டி தட்டிச் சென்றுள்ளார் . புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு இந்த தேசிய விருது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன பெயர் வைக்கலாம்

என்ன பெயர் வைக்கலாம்

ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்கும் முயற்சியில் இயக்குனர் பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 இந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X