சூரியின் சம்பளம் இதுதான்.. அவர் ஒரு ஏரியாவையே விலை பேசுறாரு.. பார்த்திபன் ஓபன் டாக்

சென்னை: சூரிதான் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷ்னல். ரொம்பவே கஷ்டப்பட்டு பிறகு காமெடியன் ஆனவர் அவர். அதன் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் கதையின் நாயகனாக தோன்றி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கும் சூழலில்; அவர் குறித்து பார்த்திபன் பேசியிருக்கிறார்.

சினிமாவில் கடுமையாக கஷ்டப்பட்டால் கண்டிப்பாக சினிமா கைவிடாது என்பதற்கு சூரிதான் அடையாளமாக திகழ்கிறார். மதுரையிலிருந்து பெரும் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பிவந்து; கிடைத்த வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார். தீபாவளி, காதல் உள்ளிட்ட படங்களில் எல்லாம் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியவருக்கு; வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா காமெடி அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரை மட்டுமில்லாத புதிய வாழ்வையும் பெற்று தந்தது.

Soori Parthiban Garudan


முன்னணி காமெடியன்: பரோட்டா காமெடிக்கு பிறகு சூரிக்கு நல்ல காலம் பிறந்தது. தொடர்ந்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சூரி; படத்துக்கு படம் தன்னுடைய திறமையை வளர்த்து சென்றார். அதன்படி விஜய், அஜித், ரஜினி உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியும் செய்து முன்னணி காமெடி நடிகர் என்ற பெயரை பெற்றார். ஆனால் அவரது காமெடி மீது ஒருதரப்பினர் தொடர்ந்து விமர்சனத்தை வைத்துக்கொண்டே இருந்தனர்.

கதையின் நாயகன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார் சூரி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டவர் விடுதலை சூரி என்ற அழைக்கப்படும் நிலை மாறியது. அந்த அளவுக்கு படத்தின் பல சீன்களிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியிருந்தார். அதனைப் பார்த்த பலரும் சூரிக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என்று மகிழ்ச்சியுடன் வாயை பிளந்தனர்.

கருடன் மெகா ஹிட்: விடுதலை படத்துக்கு பிறகு சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படம் மெகா ஹிட்டானது. படத்தின் இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் பல காட்சிகள், க்ளைமேக்ஸ் காட்சி என படத்தில் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் சூரி. விடுதலை படத்தைவிடவும் இதில் சூரியின் நடிப்பு அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு சென்றிருப்பதாக ரசிகர்கள் கூறினர். இனி கதாநாயகனாகவே நடிக்கவும் சூரி முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் கொடுக்காளி, ஏழு கடல் ஏழு மலை படங்கள் வெளியாகின்றன. விடுதாலி 2, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் பேட்டி: இந்நிலையில் சூரி குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சூரியை இந்த நிலைமையில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து அவர் அடைந்திருக்கும் உயரம் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது சூரிக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம். முன்பு சாலிகிராமத்தில் இடம் வாங்கினார். இப்போது சாலிகிராமத்தையே வாங்க விலை பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X