மகனுக்கு திருமணம்.. பிறகு எனக்கு திருமணம்.. பார்த்திபன் அதிரடி.. இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: புதிய பாதை படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற பார்த்திபன் கோலிவுட்டின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் பட்டையை கிளப்பிவருகிறார். அவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியிலேயே முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது திருமணம் பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கிறார்.
இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படுபவர் பாக்யரஜ். அவரிடம் உதவி இயக்குநராக சினிமா பணிகளை கற்றுக்கொண்ட பார்த்திபன் சீதாவை ஹீரோயினாகவும், தன்னை ஹீரோவாகவும் வைத்து இயக்கிய முதல் படம் புதிய பாதை. தான் இயக்கிய முதல் படத்திலேயே கமர்ஷியலாகவும், சமூகத்துக்கு தேவையான கருத்தையும் வைத்து படம் எடுத்து கவனம் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அந்தப் படம் தேசிய விருதையும் வென்று கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய வெற்றி இல்லை: புதிய பாதை படத்தின் வெற்றிக்கு பிறகு உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை என ஏகப்பட்ட படங்களை எடுத்தாலும் அந்தப் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அவை அனைத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டு தனது பாதை தனித்துவமான பாதை என்பது நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவர் இன்னும் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

நடிகராக பார்த்திபன்: முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் அவருக்கு நடிப்பதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருகட்டத்தில் படங்கள் இயக்குவதை குறைத்ததால் மற்றவர்களின் இயக்கங்களிலும் ஹீரோவாக ஹிட் படங்களை கொடுத்தார். இப்போது முழுக்க முழுக்க குணசித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துவருகிறார். இருப்பினும் இயக்கத்தை விட்டு முழுவதுமாக விலகவுமில்லை. கடைசியாக அவர் இயக்கிய டீன்ஸ் படம்கூட வித்தியாசமான அட்டெம்ப்ட்டாகத்தான் பார்க்கப்பட்டது.
திருமணமும், பிரிவும்: இதற்கிடையே முதல் படத்திலேயே தனக்கு ஜோடியாக நடித்த சீதாவை காதலித்தார். தங்கள் காதலை திருமணம்வரை சென்று எடுத்து சென்று ஒரு மகள், மகனை பெற்றவர்கள், நீண்ட காலத்துக்கு தங்கள் ரிலேஷன்ஷிப்பை கொண்டு செல்லவில்லை. சில காரணங்களால் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். சீதாவை பிரிந்த பிறகு இரண்டாவது திருமணமும் செய்யாமல் சிங்கிளாகவே காலத்தை கழிக்கிறார் அவர்.
பார்த்திபன் பேட்டி: இந்நிலையில் பார்த்திபன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாக்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர். அந்தப் பேட்டியில் அவர், "எனது மகனுக்கு திருமணத்தை முடித்த பிறகு நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன். எனக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணை சிறந்ததாக அமைய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











