கமல் அப்படி..விஜய்சேதுபதி இப்படி..பட்டுனு உண்மையை சொன்ன பார்த்திபன்!

சென்னை : நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி பற்றி ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்த, சீனு ராமசாமியின் மாமனிதன் திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ந்து விருதுகளை வென்று வருகிறது.

இப்படம் புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது.

மாமனிதன்

மாமனிதன்

மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்கும் முயற்சிகளில், ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பருடன் மாட்டிக் கொள்கிறார். பின்னர் அதிலிருந்து வெளிவர அவர் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் கதைக்களம்.

காயத்ரி

காயத்ரி

இப்படத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்த, காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு அப்பா மகன் கூட்டணியான இளையராஜா மற்றும் யுவன் சங்கரராஜா இசையமைத்துள்ளனர்.

தேசிய விருதுக்கு தகுதியானவர்

தேசிய விருதுக்கு தகுதியானவர்

இந்த படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இது ஒரு யதார்த்தமான கிளாசிக் என்றும், படத்தில் விஜய் சேதுபதி தனது அற்புதமான நடிப்பிற்காக தேசிய விருதுக்கு தகுதியானவர் என்றும் ஷங்கர் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டினார். அதேபோல நடிகர் சிவக்குமாரும் விஜய்சேதுபதியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்.

பார்த்திபன் ட்வீட்

பார்த்திபன் ட்வீட்

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் இன்று மாலை ...ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் காத்ரினா கைஃப் இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்பர்-ஐ சந்தித்தேன்.நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்.

கமல் சார் செங்கடல்

கமல் சார் செங்கடல்

கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல். கடலாய் இருவருக்குமே கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது.பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும் அதிநேசம் கொள்பவராய் இருந்தார்.தித்திப்பின் சுவை நாவினில். சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில் என்று விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X