வள்ளுவருக்கு முப்பால் தான் தெரியும்: இயக்குனர் விஜய்க்கோ அமலா பாலும் தெரியும்- பார்த்திபன் கலகல
சென்னை: வள்ளுவருக்கு முப்பால் தான் தெரியும். ஆனால் இயக்குனர் விஜய்க்கு அமலாபாலும் தெரியும் என்று சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் பேசினார்.
ஏ.எல். விஜய் தெய்வத்திருமகள் படம் புகழ் பேபி சாராவை வைத்து இயக்கியுள்ள படம் சைவம். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி. நகரில் நடைபெற்றது. விழாவில் நடிகைகள் அனுஷ்கா, அமலா பால், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் பேசுகையில்,

வேட்டி, சட்டை
என்னை பொறுத்த வரை வேட்டி, சட்டை தான் சைவ உடை. அதனால் தான் நான் இன்று வேட்டி, சட்டை அணிந்து வந்திருக்கிறேன்.

இயக்குனர் விஜய்
சைவம் படத்தை இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பன் தயாரித்துள்ளார். என்னை பொறுத்த வரை அவரின் சிறந்த தயாரிப்பு விஜய்யை பெற்றது தான்.

அமலா பால்
வள்ளுவருக்கு அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய 3 பால்களே தெரியும். ஆனால் இயக்குனர் விஜய்க்கோ அமலா பாலும் தெரியும் என்றார். அவரது பேச்சைக் கேட்டு விஜய் உள்பட அங்கிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.

காதல்
இயக்குனர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் காதல் என்று ஒரு காலத்தில் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











