Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்.. சச்சி விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.. பார்த்திபன் ட்வீட்!
கொச்சி: மறைந்த இயக்குனர் சச்சி விருப்பம் நிறை வேற முயன்று பார்க்கிறேன் என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 'அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்தனர்.
பிருத்விராஜ், முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.
முதல் பட ஷூட்டிங் ஸ்டில்.. ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம்.. படம் இவ்வளவு நாள்தான் ஓடுச்சாம்!
லாக்டவுன்
இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இது. இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. தமிழில் இதன் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகிர்தண்டா படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார்.
மாரடைப்பு
இந்தியில் இதன் ரீமேக் உரிமையை பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பெற்று வந்த சச்சி, மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன் தினம் மரணமடைந்தார். அவரது மறைவு கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியாயம் சேர்ப்பார்கள்
இந்நிலையில் சச்சி, மறைவுக்கு முன் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி, கேரளாவில் பரபரப்பானது. அந்தப் பேட்டியில், சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தமிழ், இந்தி ரீமேக்கில் இந்தந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டிருந்த நடிகர்கள், அந்த கேரக்டர்களுக்கு நியாயம் சேர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
Recommended Video
கோஷியாக கார்த்தி
'யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது அந்த தயாரிப்பாளர்களின் உரிமைதான். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், என் சாய்ஸில், கோஷி கேரக்டருக்கு கார்த்தியும் அய்யப்பன் நாயர் கேரக்டருக்கு பார்த்திபனும் பொருந்தமாக இருப்பார்கள். பார்த்திபன் சுவாரஸ்யமான நடிகர். சில வருடங்களாக அவரை ஆழமாகக் கவனித்து வருகிறேன். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் கோஷியாக, ஜான் ஆபிரஹாமும் அய்யப்பன் கேரக்டருக்கு நானா படேகரும் சரியாக இருப்பார்கள்' என்று தெரிவித்திருந்தார்.
முயன்று பார்க்கிறேன்
இந்நிலையில் இந்த செய்தியை கண்ட நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் அதற்கு பதிலளித்துள்ளர். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அய்யப்பனும் கோஷியும்' பிஜு மேனன் பாத்திரம், நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்' என்று கூறியுள்ளார்.