வரும்போது ஒரு பெண்... போகும்போது ஒருபெண்.. சிகப்பு மச்சம்=கமல்!- பார்த்திபன்
சிகப்பு மச்சம் என்றால் அது கமல்தான். முன்பெல்லாம் அவர் விழாக்களுக்கு வரும்போது ஒரு பெண்ணோடு வரும் கமல், போகும்போது வேறு ஒரு பெண்ணோடு போவார், என்றார் இயக்குநர் பார்த்திபன்.
என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசுகையில், "இந்த மாதிரி சினிமா நிகழ்ச்சிகளுக்கு போனதால்தான் இன்னைக்கு நானும் இந்த மேடையில் இருக்கேன்.
அப்போதெல்லாம் நிறைய சினிமா விழாக்கள் நடக்கும். நானும் தவறாம போயிடுவேன்.

25 வருடங்களுக்கு முன் நான் பார்த்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு கமல் சார் வருவார். அப்படி வரும்போது ஒரு பெண்ணோடு கை கோர்த்து வரும் கமல், போகும் போது வேறு ஒரு பெண்ணோடு கை கோர்த்துக் கொண்டு போவார். இது ஏதோ தவறித்தான் நடக்கிறது என அடுத்தடுத்த நிகழ்சிகளில் பார்த்தால்... அதுவே தவறாமல் நடக்கும்.
சிகப்பு மச்சம் = கமல் சார்!," என்றார்.
கமல் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் பேச்சின்போதும் இதற்கு எந்த பதிலும் தரவில்லை அவர்.

பார்த்திபன் பேச்சில் இடம்பெற்ற இன்னொரு விஷயம் த்ரிஷாவின் காதல்.
தன் பேச்சில் போகிற போக்கில், "திரிஷாவைக் காதலிக்க இன்று ராணா நீயா... ச்சீ நானா நீயா என்று போட்டி நடக்கிறது...," அவர் சொல்ல, ஏக கலகலப்பு!


Click it and Unblock the Notifications











