டீன்ஸ் படத்தின் 2ம் பாதி மர்மம் என்ன?.. மிஸ்டர் ஜிகே நிகழ்ச்சியில் ஓபன் பண்ண பார்த்திபன்!
சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்துள்ள டீன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படத்துடன் போட்டியாக வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் ரீதியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூலில் ஏற்றத்தை கண்டது.
இந்தியன் 2 படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பல இடங்களில் இந்தியன் 2 படத்துக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு, டீன்ஸ் படத்துக்கான காட்சிகள் சற்றே அதிகப்படுத்தப்பட்டது.

முதல் நாளில் வெறும் 7 லட்சம் ரூபாய் தான் டீன்ஸ் படத்துக்கு வசூல் வந்ததாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த நாளில் 18 லட்சம், 26 லட்சம், 14 லட்சம் என அதிகரித்து 75 லட்சம் வரை டீன்ஸ் திரைப்படத்துக்கு வசூல் வந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
டீன்ஸ் ஸ்பாய்லர்: பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்தில் 13 பருவ வயது குழந்தைகள் நடித்திருந்தனர். மேலும், யோகி பாபு ஒரு கதாபாத்திரத்திலும் பார்த்திபன் ஒரு முக்கிய ரோலிலும் நடித்திருந்தார். படத்துக்கு விமர்சனம் சொன்ன பலரும் முதல் பாதி கதையை மட்டுமே சொல்லி விட்டு 2ம் பாதி சஸ்பென்ஸை அப்படியே ரசிகர்கள் பார்க்கட்டும் என ஸ்பாய்லர் ஃப்ரீ ரிவ்யூவாகவே சொன்ன நிலையில், தற்போது படத்தின் மொத்த கதையையே பார்த்திபன் மிஸ்டர் ஜிகே யூடியூப் சேனலில் கூறிவிட்டார்.

டீன்ஸ் செகண்ட் ஹாஃப் கதை என்ன?: டீன்ஸ் படத்தில் 13 வயதான குழந்தைகள் தாங்கள் பெரியவர்களாக மாறிவிட்டோம் என்பதை நிரூபிக்க ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்லப்படும் கதையை கேட்டு, அந்த ஊருக்குச் சென்று அதில் உள்ள மர்மத்தை வெளிச்சம் போட்டு காட்ட முயல்கின்றனர். ஆனால், வெட்ட வெளியில் திடீர் திடீரென ஒவ்வொரு சிறுவர்களாக காணாமல் போக, அதற்கு பின் உள்ள மர்மம் என்ன என்பது தான் படத்தின் செகண்ட் ஹாஃப்.
ஏலியன் கதை: சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகவே அந்த படத்தின் 2ம் பாகத்தை பார்த்திபன் உருவாக்கியுள்ளார். ஏலியன்களை தொடர்பு கொள்ள கோல்டன் டிஸ்க் எனும் விஷயத்தை நாசா 70களிலேயே அனுப்பியது குறித்தும் அதை பயன்படுத்தி பூமிக்குள் வரும் ஏலியன்கள் செய்யும் வேலை தான் 2ம் பாதி படம் என்றும் அதில் இருந்து அந்த சிறுவர்கள் எப்படி மீண்டனர் என்பது தான் கதை எனக் கூறியுள்ளார். இந்த படத்தில் மிஸ்டர் ஜிகேவும் பணியாற்றியதாகவும் அவருக்கும் நன்றி என பார்த்திபன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











