தில்லுமுல்லு பூஜையில் பார்த்திபனின் 'சிவ... சிவா' பேச்சு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அசத்தல் காமெடி நடிப்பில் வெளியான படம் தில்லுமுல்லு. இப்படம் இப்போது ரீ்மேக் ஆகிறது. ரஜினி செய்த கோல்மால் கேரக்டரில் சிவா நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதில் பார்த்திபன் கலந்து கொண்டு வழக்கம் போல அனைவரையும் கலாய்த்தார்.
பார்த்திபன் பேசுகையில், ரஜினிகாந்த் நடித்த பாத்திரத்தில் சிவா நடிக்கிறார். அதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் சிவாவை விட அழகான இஷா தல்வார் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் கிடைத்தால் சிவனே கூட பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடி விடுவார். அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் இஷா. சிவனுக்கே அப்படி என்றால் சிவா எம்மாத்திரம்...
இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். சிவாவுக்கு தயவு செய்து சம்பளம் தராதீர்கள். அதுதான், அழகான நாயகியையே அவருக்கு சம்பளமாக தந்து விட்டீர்களே....
பிரகாஷ் ராஜ், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் நடிப்பது மிகச் சிறப்பானது. தேங்காய்க்கு இதுவரை மாற்று இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்திற்கு பிரகாஷ் ராஜ் வந்துள்ளார். தேங்காய்க்கு சரியான மாற்று பிரகாஷ் ராஜ்தான் என்றார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications
