எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்: ராதாரவி நேரில் வாழ்த்து
Recommended Video

சென்னை: நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரன் தான்.

திருமணம்
அபிநயா, நரேஷின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நரேஷ் தொழில் அதிபராக உள்ளார். திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நரேஷ்
எம்.ஆர். ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் தான் நரேஷ் கார்த்திக். முன்னதாக நரேஷ், அபிநயாவின் திருமண நித்சயதார்த்தம் சென்னையில் உள்ள சோழா ஹோட்டலில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

அபிநயா
அபிநயா, நரேஷ் கார்த்திக் திருமண விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். நயன்தாரா விவகாரத்தில் அவரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ்
பார்த்திபனின் குருவான இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தன் சிஷ்யன் வீட்டு விசேஷத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

ஷோபா
பார்த்திபன் மீது விஜய்க்கு தனி மரியாதை உண்டு. இந்நிலையில் பார்த்திபன் மகள் திருமண விழாவில் விஜய்யின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

கார்த்தி
நடிகர் கார்த்தி தனது மனைவியுடன் வந்து பார்த்திபனின் மணமக்களை வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications