மகள் சார்பாக பார்த்திபன் வெளியிட்ட முக்கிய பதிவு...குவியும் கமெண்ட்கள்

சென்னை : தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள், புதுவிதமான முயற்சிகள் செய்வதில் புகழ்பெற்றவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். இவரின் மற்றொரு புதிய முயற்சியாக ஒருவர் மட்டுமே நடித்த படமான ஒத்த செருப்பு படம், தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

தற்போது தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தின் வேலைகளில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல காலமாக முயற்சித்தும் முடியாமல் போய், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ஓட்டு போட முடியாமல் போனது

ஓட்டு போட முடியாமல் போனது

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் முகத்தில் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பார்த்திபன் சமூக வலைதளத்தில் கூறி இருந்தார். இதனால் தான் தன்னால் ஓட்டளிக்க முடியாமல் போனதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

தடுப்பூசியால் ஒவ்வாமை

தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், தான் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டதாக கூறி இருந்தார். அத்துடன், தற்போது தனக்கு காய்ச்சல், உடம்பு வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

என் மகள் சொன்ன தகவல்

இதைத் தொடர்ந்து, தன் மகள் கீர்த்தனா கூறியதாக குறிப்பிட்டு கொரோனா தடுப்பூசி பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், என் அன்பு மகள் கீர்த்தனா இத்த'தகவலை' பதிவுச் செய்யச் சொன்னார்.
எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.

தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.ஒரே நாளில் சரியாகியும் விட்டது.எனவே தடுப்பூசி அவசியமானது.but ஜூரம்,உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம்.என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.

விருது வென்ற கீர்த்தனா

விருது வென்ற கீர்த்தனா

பார்த்திபனின் மகள் கீர்த்தனா குழந்தை நட்சத்திரமாக, மணிரத்னத்தின் உதவியாளர் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை கீர்த்தனா பெற்றார். இந்தியாவின் டாப் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்யை 2 ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X