twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சிறந்த நடிகர் விருது..பெற்றவருடன் பெறாதவர்“… ட்விட்டர் பதிவால் சர்ச்சை.. பார்த்திபன் விளக்கம் !

    |

    சென்னை : பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றது.

    இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் கடந்த 25ந் தேதி நடைபெற்றது.

    இதில் தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை 'சிறந்த நடிகர் விருது! பெற்றவருடன் பெறாதவர்'என்ற தலைப்பையும் பதிவிட்டு இருந்தார். இதனால், பார்த்திபனை பலரும் கமெண்ட்டில் விமர்சித்ததை அடுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

    இரு தேசிய விருது

    இரு தேசிய விருது

    2019ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7 . இந்த திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கி இருந்தார். பல விருதுகளை குவித்த இந்த திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது என இருவிருது கிடைத்தது.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த நடிகர் மனோஜ் பாஜ்பாய், 'போன்ஸ்லே' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் மனோஜ். இது இவர் பெரும் மூன்றாவது தேசிய விருது.

    செல்ஃபி

    செல்ஃபி

    மனோஜ் பாஜ்பாயுடன் செஃல்பி எடுத்துக்கொண்ட பார்த்திபன், சிறந்த நடிகர்! விருது ... பெற்றவருடன் பெறாதவர்" என்ற தலைப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு, பல நெகடிவ் கருத்துக்கள் வர அதற்குரிய விளக்கத்தை தற்போது அளித்துள்ளார் பார்த்திபன்.

    உழைப்பே அஸ்திவாரம்

    உழைப்பே அஸ்திவாரம்

    அதாகப்பட்டது... ஆதங்கமாகப்பட்டது... ஆர்வமாக்கப்பட்டு... அதுவே க்ரியா ஊக்கியாகி பின் கிரியேட்டிவிட்டி ஆகி அதே சிந்தையாகி சித்தமாகி சிரத்தையாகி செயல் வடிவமாகிப் படைப்பாகிப் பரிசாகியும் விடுகிறது எனக்கு. முன் அடையாளமில்லாத நான் சினிமாவுக்குள் வந்ததே திறமை பாராட்டப்படுவதற்கே. அதற்கான உழைப்பே அஸ்திவாரம்.

    ஆதங்கத்தில் அல்ல

    ஆதங்கத்தில் அல்ல

    இது ஒருபக்கம், நான் எந்தப் பதிவை இட்டாலும், "சிறந்த நடிகர் மனோஜ் பாயுடன்" என்று மொக்கையாக வெறும் செய்தியாக இடுதல் பிடிக்காது. அதில் ஏதேனும் hook point, எவ்வாறெல்லாம் அவ்வார்த்தைத் தொடர் கவனிக்கப்படுகிறது என்ற ஆர்வத்தில் தான் இட்டேனே தவிர, ஆதங்கத்தில் அல்ல. அது தவறாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ஆயிரத்தில் 990 பேர் எழுதியிருக்கும் வாசகங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

    போஸ்ட்டே தேவையில்லையோ?

    போஸ்ட்டே தேவையில்லையோ?

    மீதமுள்ள வாசகங்கள் ...சோதனை முயற்சி போடும் போஸ்ட்டில் தேவையில்லையோ? அல்லது போஸ்ட்டே தேவையில்லையோ? என்றும் யோசிக்க வைக்கிறது. பூமி கூட 100 டிகிரி நேராகச் சுழலவில்லையே! 23.5 டிகிரி சாய்வாகத்தானே?" இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    English summary
    National award winner Parthiban's explanation for the controversial Twitter post, சர்ச்சைக்குரிய ட்விட்டர், பார்த்திபன் விளக்கம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X