twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரவின் நிழல் படத்தின் “பேஜாரா காதல் வலியடா’’ வீடியோ பாடல் வெளியீடு !

    |

    சென்னை : இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து பேஜாரா வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

    Recommended Video

    The Warrior | Ilaiyaraaja MP கலாய்த்த Parthiban

    நடிகர் மற்றும் இயக்குநர் ஆர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர்போனவர். இவரது நடிப்பும் சரி, இயக்குமும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும். இயக்கம், நடிப்பு என இரண்டையும் சமமாக செய்து வருகிறார்.

    தற்போது இவரது கைவண்ணத்தில் இரவின் நிழல் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    ஜெயமோகன் தான் மாற்றினார்; இவர் தான் அந்த அருண்மொழி...ஜெயமோகனை சீண்டும் ப்ளுசட்டை மாறன் ஜெயமோகன் தான் மாற்றினார்; இவர் தான் அந்த அருண்மொழி...ஜெயமோகனை சீண்டும் ப்ளுசட்டை மாறன்

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

    சிங்கிள் ஷாட்டில்

    சிங்கிள் ஷாட்டில்

    நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

    பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதுவும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

    அசத்தலான பாடல்

    இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பார்த்திபன் படு பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து "பேஜாரா காதல் வலியடா'' பாடல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஹரிசரண் சேஷாத்ரி, பாம்பா பாக்யா பாடியுள்ளனர். பார்த்திபன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். பாடல் வெளியான சில மணிநேரத்திலேயே இணையத்தில் வைரலாகி உள்ளது.

    English summary
    parthiban’s iravin nizhal Bejara video song release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X