கேன்ஸ் திரைப்பட விழா.. வேட்டி சட்டையில் பார்த்திபன்… மாஸ் கட்டப்போகிறது இரவின் நிழல் !
பிரான்ஸ் : பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பிரான்சில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ந்தேதி தொடங்கியது. வருகிற 28ந்தேதி வரை 12 நாட்கள் இவ்விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் பார்த்திபனின் இரவின் நிழல் திரையிடப்பட உள்ளதால், இந்த விழாவிற்காக பார்த்திபன் கிளாசாக புறப்பட்டு செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கேன்ஸ்
ஒவ்வோர் ஆண்டும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்பட வேண்டும் என்பதும் சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதில், விழாவில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்.

சிவப்பு கம்பள வரவேற்பு
அதன் தொடக்க விழாவில் இந்தியா சார்பாக பங்கேற்ற மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, மூத்த இயக்குனர் சேகர் கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர்கள் மாதவன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் இந்திய குழுவில் ஒரு பகுதியாக கலந்து கொண்டனர்.

இரவின் நிழல்
இன்றைய தினம் நடிகர் மாதவன் தயாரிப்பில் உருவான ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. மேலும், இயக்குநர் பார்த்திபனின் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டன இரவின் நிழல் திரையிடப்படுகிறது. இப்படத்தில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நடப்பதெல்லாம் சிறப்பை நோக்கி
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் பார்த்திபன் பிரான்சிற்கு வேட்டி,சட்டையுடனும் பின் ஹாலிவுட் ஹீரோப்போல கூலிங்கிளாசுடன் இருக்கும் வீடியோவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு தலைப்பாக நடப்பதெல்லாம் சிறப்பை நோக்கி என பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











