பார்த்திபனின் அடுத்த அதிரடி..இரவின் நிழல் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை : நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

தமிழில் வணக்கத்தை போட்ட அபிஷேக் பச்சன் | இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா | Iravin Nizhal *Kollywood

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர்போனவர். இவரது நடிப்பும் சரி, இயக்குமும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும். இயக்கம், நடிப்பு என இரண்டையும் சமமாக செய்து வருகிறார்.

தற்போது இவரது கைவண்ணத்தில் இரவின் நிழல் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் ஷாட்டில்

சிங்கிள் ஷாட்டில்

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதுவும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமா பிரியர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X