Don't Miss!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- News
ஈரோடு கிழக்கு: அண்ணன் மறைவு..வேட்பாளராக அப்பா-தேர்தல் பிரசாரத்தை ஜரூராக தொடங்கிய சஞ்சய் சம்பத்!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஒத்த செருப்பு சைஸ்7… ஹிந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது.. பார்த்திபனின் சூப்பர் அப்டேட்!
சென்னை : ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாரிக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.
ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருக்கும் இந்தப் படம் உலகின் முதல் முயற்சி, இந்தியாவின் மிக முக்கியமான முயற்சி இதுவாகும்.
கொரோனாவில் இருந்து மீண்டார் இயக்குநர் வசந்தபாலன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், நடிப்பவரே எழுதி இயக்கியிருப்பது இதுவே முதல் முறையாம்.

ஒரே ஆளாக
இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்த திரைப்படம் ஒத்தசெருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார்.

விருதுகளை வென்றது
ஒரு நபரே எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது.

2 தேசிய விருது
மேலும், 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை ரசூல் பூக்குட்டி தட்டிச் சென்றுள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு இந்த தேசிய விருது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலம், இந்தி
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்க முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் தமிழ் அழகு, என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ், தட்டுத்தடுமாறி ஆங்கிலமும், தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.
Recommended Video

முஜே நஹி மாலும் ஹே.
ஹிந்தி, முஜே நஹி மாலும் ஹே. ஆனால், ஒத்த செருப்பு ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால், இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assistant(பால் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார். ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புவர்கள் தொடர்பு கொள்ள என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ஒத்த செருப்பு திரைப்படம் வெகு விரைவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.