கடைசியில் பார்த்திபன் நிலை இப்படி ஆகிவிட்டதே
சென்னை: பார்த்திபன் போட்டுள்ள ட்வீட்டை பார்ப்பவர்கள் கடைசியில் அவர் நிலை இப்படி ஆகிவிட்டதே என்கிறார்கள்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது செல்ல மகள் கீர்த்தனாவுக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கீர்த்தனா தனது செல்ல நாயுடன் இருக்கும் வீடியோவை பார்த்திபன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வீடியோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,
அடுத்த ஜென்மத்தில என் பொண்ணு வளர்க்கிற நாய்க்குட்டியா பொறக்கனும்! எனக்கு வந்த பொறாமைய ஏன் கேக்'குறீங்க?. என்று தெரிவித்துள்ளார். வார்த்தைகளில் விளையாடுவதற்கு பெயர் போன பார்த்திபன் இந்த ட்வீட்டிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.
பார்த்திபனின் ட்வீட்டை பார்த்த ஒருவர், என்ன சார் மாத்தி மாத்தி பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications