»   »  "28 வயதில் சிலுக்கு பெண் தேவை..." குண்டக்க மண்டக்க பார்த்திபனின் அல்டிமேட் ட்வீட்!

"28 வயதில் சிலுக்கு பெண் தேவை..." குண்டக்க மண்டக்க பார்த்திபனின் அல்டிமேட் ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பார்த்திபன், தான் எடுக்கப்போகும் 'உள்ளே வெளியே 2' படத்திற்கான நடிகைகள் தேடலில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் மலேசியாவில் நடைபெற்றுவரும் நட்சத்திர கலைவிழாவில கலந்து கொள்ளும் பார்த்திபன் தனது படத்திற்கான தயாரிப்பாளரையும் உறுதி செய்யவிருக்கிறார்.

இந்நிலையில், 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான நடிகைகள் தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் ஆர்.பார்த்திபன்.

தயாரிப்பாளர் தேடும் பார்த்திபன்

தயாரிப்பாளர் தேடும் பார்த்திபன்

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடிக்கவிருக்கும் 'உள்ளே வெளியே 2' படத்திற்காக தயாரிப்பாளர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அதற்காகவே மலேசியாவுக்கு வர இருப்பதாக வெளிப்படையாய் அறிவித்திருந்தார்.

புதிய பாதை பார்த்திபன்

புதிய பாதை பார்த்திபன்

1989-ம் ஆண்டு 'புதிய பாதை' என்ற சிறந்த படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமாகி அவரது குருநாதர் பாக்யராஜைப் போல முதல் படத்திலேயே பெண்களை அதிகம் கவர்ந்தார். அடுத்த படமே இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாக எடுத்து எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

மலேசியா செல்லும் பார்த்திபன்

மலேசியா செல்லும் பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டனங்களைச் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரைத் தேடித்தான் மலேசியா சென்றிருக்கிறார்.

தயாரிப்பாளரை உறுதி செய்ய

சமீபத்தில், "மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5, 6, 7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான 'உள்ளே வெளியே-2' படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன். சந்திக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்'' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகைகள் தேவை

'உள்ளே வெளியே 2' படத்திற்குப் பொருத்தமான புதுமுகப் பெண்களைத் தேடவும் ஆரம்பித்துவிட்டார் பார்த்திபன். அதற்காக இன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவரது ஸ்டைலில் ஒரு பதிவையும் போட்டிருக்கிறார்.

டிஸ்கோ சாந்தி வேணாமா

நடிகைகள் தேடலிலேயே 'உள்ளே வெளியே' ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் பார்த்திபன். அவரது ட்வீட்டுக்கு ஒரு ரசிகர் "சிலுக்கு மாதிரியே தான் வேணுமா..? டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி மாதிரிலாம் இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?" என கமென்ட் செய்துள்ளார்.

பார்த்திபன் ஸ்டைலிலேயே வாழ்த்து

2.
0.
1.
8-ன்
18-ல் துவங்கும் 'உள்ளே வெளியே'
18-ற்கான commercial comedy thriller படம்
18-வயதில் அமைதி+வசீகரமான பெண் நடிப்பில்
18-வாரங்களில் படம் முடிந்து
18-வாரங்களுக்கு மேல் திரையில் ஓடி
18-கோடிக்கு மேல் வசூல் புரிந்து
18-விருதுகளுக்கு மேல் பெறவேன்டும் என
18- முறை வாழ்த்துகிறேன்" என ஒரு ரசிகர் பார்த்திபன் ஸ்டைலிலேயே வாழ்த்தியுள்ளார்.

English summary
Actor cum Director R.Parthiban, looking for actresses for 'Ulle veliye 2' movie. In this case, Parthiban has tweeted on the selection of actresses by his style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X