'சைவம்' விழாவில் அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கப்படுத்திய பார்த்திபன்!!

By Shankar

சென்னை: பணம் வாங்காம ஓட்டுப் போட்டா அது சைவம்.... வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் அசைவம்... என்றார் பார்த்திபன்.

பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் 'சைவம்.' இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

Parthiban's Veg, Non - Veg speech at Saivam audio launch

ஏ.எல்.அழகப்பன் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

பாடல்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் வெளியிட, நடிகைகள் அனுஷ்கா, அமலா பால் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

பார்த்திபன்

விழாவில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், "நான் இந்த விழாவுக்கு, வேட்டி கட்டி வந்ததை பார்த்து, என்னிடம் சிலர் என்ன? வேட்டி கட்டி இருக்கீங்க? என்று கேட்டார்கள். கட்டாவிட்டால் அவிழ்ந்து விடும் என்று சொன்னேன்.

சைவ - அசைவ ஜோக்

'ஜோக்'கில் கூட சைவ 'ஜோக்', அசைவ 'ஜோக்' என்று இரண்டு உண்டு. அதேபோல முத்தத்திலும் சைவ முத்தம், அசைவ முத்தம் என இரண்டு வகை முத்தம் இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறி இருக்கிறார்.

சிங்கத்தின் கதை

சிங்கம், சைவமா? அசைவமா? என்று கேட்டால் எல்லோரும், அசைவம் என்று தான் சொல்வார்கள். நான் யு.டியூப்பில் ஒரு படம் பார்த்தேன். ஒரு சிங்கம் குரங்கை கடித்து வாயினால் கவ்வி இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது குரங்கின் வயிற்றில் இருந்து ஒரு குட்டி கீழே விழுந்தது. அந்த குட்டி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றது. உடனே சிங்கம் குரங்கை விட்டுவிட்டு அதன் குட்டியை கவ்வியபடி தன் குட்டிகள் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தது. அந்த குரங்குக் குட்டியை சிங்கம் தடவிக் கொடுத்தது.

உணர்வுதான் முக்கியம்

குரங்குக் குட்டியை இன்னொரு சிங்கம் கடிக்க வந்தபோது அந்த சிங்கத்தை இந்த சிங்கம் விரட்டி அடித்தது. இப்போது சொல்லுங்கள், சிங்கம், சைவமா, அசைவமா?. உணவால் சைவமா, அசைவமா? என்பது முக்கியம் அல்ல. உணர்வால் சைவமா, அசைவமா? என்பது தான் முக்கியம்.

ஓட்டு

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அதற்கு பெயர், அசைவம். வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம். இயக்குநர்களில் விஜய் மாதிரி சைவமான ஆளைப் பார்தத்தில்லை. அவர் உணர்வுகளின் அடிப்படையில் படம் எடுக்கிறவர். ''திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய 3 பால்களைத் தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலா பாலையே தெரியுமே... விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், 'அமலா'க்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்!'' என்றார்.

சரீ... ஓட்டுக்கு பணம் வாங்கும் சட்டவிரோதமும், அசைவம் சாப்பிடுவதும் ஒன்றாகிவிடுமா.. என்னங்க பார்த்திபன்?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X