விரைவில் புதிய பாதை இரண்டாம் பாகம்.. இன்றைய டிரெண்டுக்கு மாறும் பார்த்திபன்!

சென்னை: 1989ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. இப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோரது நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் அழகி. உதய கீதா தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அதிக நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்து 2004ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

Parthiban said that the puthiya pathai 2 will come soon

அழகி மறுவெளியீடு: இந்த நிலையில் இப்படம் 22 வருடம் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பார்த்திபன், இந்த விழாவில் தங்கர்பச்சான் இருந்து இருக்க வேண்டும் அவர் இப்போது பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார். அவர், நானும் ஒரு இயக்குநர் என்பதை மறந்து, அடிக்கடி என்னிடம் வந்து கேட்பார், தமிழ் சினிமாவில் என்னைவிட்டா நல்ல படம் எடுக்க யாரு இருக்காங்க என்பார். அதையேத்தான் பிரச்சாரத்திலும் என்னை விட நல்லவன் இல்லை என்று சொல்லி ஓட்டு கேட்பார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் அவருக்கு இப்போதே என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அழகான காதல் கதை: உண்மையில் இந்த அழகி திரைப்படம் ஒரு மேஜிக்கல் திரைப்படம் தான், இந்த படத்தில் காதலை அழகாக சொல்லி இருப்பார்கள். எப்போதுமே காதலில் ஜெயித்து மனைவி ஆவதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, தோற்ற காதலை மனம் அசைப்போட்டுக்கொண்டு, அந்த காதலியை தேடிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட திரைப்படம் தான் அழகி. இந்த படத்தில் தனம் என்ற கேரக்டரில் அழகாக நடித்து இருப்பார். அதைவிட வளர்மதியாக நடித்த தேவயாணியின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

விரைவில் புதிய பாதை 2: இதைத் தொடர்ந்து பேசிய பார்த்திபன், நான் இயக்கி நடித்த புதிய பாதை படத்தை மறுவெளியீடு செய்யாமல், நேரடியாக மீண்டும் ரீமேக் செய்யப்போகிறேன். டார்க்ர் வெப் என்கிற பெயரில் இயக்கி, நானே நடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இப்போது, இயக்கி வரும் டீன்ஸ் படத்திற்குப் பின் டார்க் வெப் பணிகளை ஆரம்பிப்பேன் என்றார். 1989ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை முதன் முதலாக பார்த்திபன் எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X