ஸ்கொயரா இல்லை.. ரவுண்டா.. PS 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் ரைடு பண்ணுங்க.. பார்த்திபன் நக்கல்!
சென்னை: ஸ்கொயரா சொல்லல.. ரவுண்டா சொல்றேன் என ஜி ஸ்கொயர் ரெய்டை வைத்து பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் பார்த்திபன் செம நக்கலாக பேசிய பேச்சு தீயாக பரவி வருகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தன்னிடம் பொன்னியின் செல்வன் படத்துக்கு நீங்க பேசியது வைரலானது அதே போல ஏதாவது பேசுங்க என்றார்.
பொன்னியின் செல்வன் ப்ரமோஷனை விட என் பேச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடப் போகிறதா என தெரியவில்லை என ஆரம்பித்து வழக்கம் போல தனது ஸ்டைலில் பட்டாசை பேசி உள்ளார்.

புஷ்பங்கள் இறங்கும் விமானம்: பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்களை பார்த்து பார்த்து மயங்கியே போய் விட்டேன். குட்டி விமானத்தில் க்யூட்டான பெண்களான த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா இறங்கி வரும் அழகை வர்ணிக்கவே வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன்.
புஷ்பக விமானம் என்று சொல்லலாமா? அல்லது புஷ்பங்கள் இறங்கி வரும் விமானம் என்று சொல்லலாமா என பார்த்திபன் பேசியது அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் அதிர வைத்தது.
தியேட்டர்களில் ரெய்டு பண்ணுங்க: வருமான வரித்துறையினர் 1000 கோடி ரூபாயை பிடிக்க வேண்டும் என்றால் நாளை முதல் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் ரெய்டு பண்ணுங்க என செம நக்கலாக பேசிய பார்த்திபன் கடைசி பன்ச்சாக ஸ்கொயரா சொல்லல? ரவுண்டா சொல்றேன் என ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையையும் உள்ளிழுத்து பேசியிருப்பது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

முதல் ஷோவே பார்ப்பேன்: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இதுவரை நான் பார்க்கவே இல்லை என அந்த படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் சொன்னது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது பேசிய பார்த்திபன் பொன்னியின் செல்வன் 2 படத்தை முதல் நாள் முதல் ஷோவே பார்க்கப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மணிரத்னத்தை நம்பிய சுபாஷ்கரன்: பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வரப்போகுது, 1000 கோடி வரப்போகுது என்றெல்லாம் நினைக்காமல் மணிரத்னத்தின் கனவையும் அதனை அவர் கச்சிதமாக நிறைவேற்றுவார் என பல கோடிகளை கொட்டி பொறுமையுடன் பக்க பலமாக காத்திருந்த லைகா சுபாஷ்கரனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பெரிய ஐஸே வைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











