நாட்டாமை படத்தை இந்த காரணத்தால் வேணாம்னு மறுத்துட்டேன்.. நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் - பார்த்திபன்!
சென்னை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஹாலிவுட்டில் பண்ணப் போவதாகவும் அப்போது தான் அந்த படத்தின் உயரம் ரசிகர்களுக்கு தெரிய வரும் என்றும் அதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், நான் சரியான வெற்றிப் பாதையில் தான் பயணித்து வருகிறேன் என்றார்.

இரவின் நிழல் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்த படத்தில் இருந்த எமோஷனல் ரசிகர்களுக்கு அதன் சிங்கிள் ஷாட் அம்சத்தால் கனெக்ட் ஆகவில்லை. அதுதான் பிரச்சனை, ஆனால், சிலர் விமர்சித்த விஷயங்கள் என்னை ரொம்பவே மனதளவில் பாதித்து விட்டது என்றார்.
ஆபாசம்னு அசிங்கப்படுத்திட்டாங்க: இரவின் நிழல் படத்தில் ஒரு தாய் பிள்ளைக்கு பால் ஊட்டுவது எப்படி ஆபாசம் ஆகும். மார்பை காட்டுகிறேன் ஆபாசக் காட்சிகள் என அசிங்கப்படுத்திட்டாங்க. அதே போல ஒரு பெண் ஆடையிழந்து நிற்கும் காட்சியில் புனிதமான இசையை சேர்த்து அதை ஒரு கலையம்சமாக இயக்கிய நிலையில், அதையும் நிர்வாண காட்சி என்றும் ஆபாச படம் என்றும் முத்திரை குத்தியது மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்றார்.
35 வருஷமும் அதே நிலைமை தான்: சினிமாவுக்கு வந்து 35 வருஷம் ஆகியும் இன்னமும் புதிய பாதை படத்திற்கு எப்படி போராடினேனோ அதே போராட்டத்தை தான் சினிமாவில் தொடர்கிறேன் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருந்தாலும், 35 வருடங்கள் இந்த துறையில் நீடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷம் தான் என்றார்.
நாட்டாமை படத்தை தவிர்த்து விட்டேன்: பல நல்ல படங்களை நான் தவிர்த்திருக்கிறேன். சினிமாவை கமர்ஷியலாக அணுகியிருந்தால், எப்படியோ இருந்திருப்பேன். நாட்டாமை படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால், அந்த படத்தின் கதையை கேட்டு விட்டு, சொம்பு வைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்வது, பஞ்சாயத்து என ஒரே காமெடியாக இருக்கு கதை வேண்டாம் என சொல்லி விட்டேன். ஆனால், அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். சரத்குமார் அதன் பின்னர், என்னிடம் ஏன் சொல்லவில்லை என்றார். இதுமாதிரி நிறைய படங்களையும் சினிமாவுக்காக பணத்தையும் இழந்திருக்கிறேன் என பார்த்திபன் உருக்கமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











