விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்பு கேட்ட பார்த்திபன்.. என்ன பண்ணாருன்னு நீங்களே பாருங்க!

சென்னை: மெர்சல் படத்தில் வெற்றிமாறன் பெயரை விஜய் தனது கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தி இருந்த நிலையில், லியோவில் அவருக்கு பார்த்திபன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Parthiban shares AI created Leo Parthiban look photo and ask apologies to Vijay fans

பெயரிலாவது லியோவில் இடம்பெற்றதே பாக்கியம் என சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் ஆரம்பத்திலேயே ட்வீட் போட்டிருந்த நிலையில், தொடர்ந்து தளபதி 68 படத்தின் அப்டேட் வந்த போதும் ரியல் விஜய் தசமி என விஜய்யை கொண்டாடி இருந்தார்.

இந்நிலையில், லியோ பார்த்திபன் லுக்கில் எடிட் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை ஷேர் செய்து பார்த்திபன் பதிவிட்டு இருக்கும் ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

லியோ பார்த்திபன் லுக்கில்: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் மிரட்ட காத்திருக்கிறார். இந்நிலையில், லியோ பார்த்திபன் லுக்கில் அவர் இருக்கும் ஏஐ எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தற்போது அதை பார்த்து ஆச்சர்யப்பட்ட பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் ரசிகர்கள் மன்னிக்க: "Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!" என நடிகர் பார்த்திபன் அந்த போட்டோவை ஷேர் செய்து அதற்கு கமெண்ட் போட்டுள்ளார்.

நல்லா இருக்கு சார்: ஆனால், பார்த்திபனை பார்த்திபன் லுக்கில் பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் அவரை திட்டாமல், நல்லா உங்களுக்கு இந்த லுக் செட்டாகுது சார், சூப்பர் என கமெண்ட் போட்டு பார்த்திபனை மேலும் ஜில்லாக்கி வருகின்றனர்.

Parthiban shares AI created Leo Parthiban look photo and ask apologies to Vijay fans

எல்சியூவுக்கு வாங்க: நீங்களும் சீக்கிரமே லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸுக்கு வாங்க சார் உங்களுடைய வித்தியாசமான ஆக்டிங் இருந்தா எல்சியூ இன்னமும் சூப்பரா இருக்கும்னு நம்புறோம் என பார்த்திபனுக்கு ரசிகர்கள் கொக்கிப் போட்டு வருகின்றனர்.

இமான் உடன் இணைந்து: இரவின் நிழல் எனும் எக்ஸ்ப்ரீமென்ட் சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் அடுத்து மிருகங்களை வைத்து ஒரு படத்தை உருவாக்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், பார்த்திபனின் அடுத்த படத்திற்கு இசையமைக்க டி. இமான் கைகோர்த்துள்ள அறிவிப்பையும் பார்த்திபன் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X