உங்க 2 பேரையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு.. பார்த்திபன் வடிவேலு சந்திப்பு.. குஷியான ரசிகர்கள்!

சென்னை: தமிழ் சினிமா பிரபலங்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ச்சியாக நடிகர் பார்த்திபன் வெளியிட்டு வருகிறார்.

ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்து டிரெண்டாக்கிய நிலையில், தற்போது வடிவேலு உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

பார்த்திபன், வடிவேலு காமெடியை பார்த்து வளர்ந்த ஏகப்பட்ட ரசிகர்கள் மீண்டும் இவங்க கூட்டணியில் ஒரு படம் வரணும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குண்டக்க மண்டக்க

குண்டக்க மண்டக்க

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும், துபாய் குறுக்கு சந்து, துபாயில் என்ன கக்கூஸ் கழுவுற வேலையா பார்த்த, குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன வடிவேலுவை கலாய்த்து பார்த்திபன் செய்யும் காமெடி காட்சிகள் ஏகப்பட்ட ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. இந்நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்த தருணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஜினியுடன் சந்திப்பு

ரஜினியுடன் சந்திப்பு

லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் வெற்றியை முன்னிட்டு சமீபத்தில் ஒரு சிறப்பான நைட் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த பார்ட்டியில் பொன்னியின் செல்வன் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்திபன் பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

பார்த்திபன் வடிவேலு சந்திப்பு

பார்த்திபன் வடிவேலு சந்திப்பு

இந்நிலையில், தற்போது நடிகர் வடிவேலுவை சந்தித்த பார்த்திபன் அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். "No comments! From my side... At present. Yours.... Always welcome!" என சூப்பரான கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

பார்த்திபனையும் வடிவேலுவையும் இப்படி ஒன்றாக பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. இவர்கள் இருவரின் காமெடி காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை சேனல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. வீடியோ மீம்களிலும் இன்றளவும் இவர்கள் தானே பாஸ் கிங் என ரசிகர்கள் கமெண்ட்டுகளாக போட்டுத் தாக்கி வருகின்றனர்.

மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

பார்த்திபன் மற்றும் வடிவேலு கூட்டணியில் மீண்டும் ஒரு பக்காவான காமெடி படம் வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் என எக்ஸ்பெரிமென்ட படமாக பண்ணி வரும் பார்த்திபன், எண்டர்டெயின்மென்ட் படம் ஒன்றை வடிவேலுவுடன் இணைந்து கொடுத்தால் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X