மரியாதைக்குரிய ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: பார்த்திபன் நறுக் #Mersal
சென்னை: மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக நெட்டில் பார்த்த ஹெச். ராஜாவுக்கு நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படம் தீபாவளி அன்று ரிலீஸானது. திருட்டு டிவிடியை ஒழிக்க திரையுலகம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெர்சல் படத்தை நெட்டில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மெர்சல்
கட்சிக்காரர்களின்
நெரிசல் காரணமாக-
மெர்சல் காணவில்லை
முட்டி மோ(டி)தி பார்க்க
வைத்துவிடுவார்களோ?
வெற்றிக்கு நன்றி சொல்ல
டெல்லி விஜய்யம்!
களவாடி
மரியாதைக்குரிய எச்.ராஜா
அவர்களுக்குரிய மரியாதையை
குறைக்க வேண்டும்-அவர் களவாடி(யாய்)
மெர்சல் கண்டிருந்தால்..!
எதிரி
நான் எல்லோருக்கும் நண்பன்!
ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும் அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!

மோதி
தெய்வமே..!!!நீங்க எங்கேயோ.. போய்ட்டீங்க.. நாங்க இருக்கோம்.மோ(டி)திப் பாத்திடலாம் என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











