twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மு.க.ஸ்டாலினுக்கு பார்த்திபன் கொடுத்த "மஞ்சள்" டானிக்!

    |

    கோவை: ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டை அணிவித்து டானிக் கொடுத்தார் பார்த்திபன்

    கோயம்முத்தூரில் மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    Parthiban speech in Kalaignar tribute!

    அப்போது பேசிய பார்த்திபன், சூரிய வணக்கம் என சொல்லி பேச ஆரம்பித்தார். சூரியன் மறைந்த பிறகு என்னை பேச அழைத்துள்ளீர்கள் என்ன பேசுவதென சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
    தமிழ் உயிர்போன்றது.. கலைஞர் மறைந்த பிறகு தமிழுக்கு உயிர்போனது என உருக்கமாக பேசினார். கலைஞருக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான பழக்கத்தை குறிப்பிட்டார்.

    கீழே இருக்கும் உயர்ந்தவர்களைப் பற்றி பேசப்போகிறேன் எனக் கூறி, ஒவ்வொரு முறையும் உடன்பிறப்புகளே என அழைத்த இந்த தொண்டர்களிடத்தில் கலைஞரை பார்க்கிறேன். திமுக தொண்டர்களை கட்டுக்கோட்போடு வைத்திருந்தார் கலைஞர் என்று சொல்வது உண்மையல்ல. அப்படி எல்லோரையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது. அது தொண்டர்களே கட்டுக்கோப்பாக இருந்தார்கள் என புகழ்ந்தார்.

    பேச்சின் நடுவே ஸ்டாலினுக்கு டானிக் கொடுக்கப் போகிறேன் எனக் கூறி அவரை மேடைக்கு அழைத்த பார்த்திபன், கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை போர்த்தி கௌரவித்தார். அதிகமாக பேசுவதை விட இதுதான் சரி எனக் கூறினார். மேலும், கரை வேட்டி கட்டிக்கொண்டு கொள்கை பேசமாட்டேன் என சொன்ன பார்த்திபன், தன்னுடைய கண்களிலேயே கருப்பு சிவப்பு இருப்பதாகக் கூறினார்.

    மருத்துவமனையில் இருந்தபோது மருந்துகளுக்கு பதிலாக கையில் ஒரு பேனாவையும், எழுத ஒரு அட்டையையும் கொடுத்திருந்தால் இன்னும் நான்கய்ந்து வருடங்களுக்கு உயிருடன் இருந்து ஹண்ட்ரட் நாட் அவுட் என இருந்திருப்பார் என கலைஞரின் இலக்கிய ஆர்வத்தை புகழ்ந்த பார்த்திபன், தொண்டர்களின் வழியே கலைஞரை காண்பதாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.

    English summary
    Actor Parthiban honored MK Stalin by presenting that Manjal Ponnadai which was beena a Kalaignar identity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X