12 வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேன்.. ஒத்து வரலைன்னா உடனே விலகிடணும்.. விவாகரத்து பற்றி பேசிய பார்த்திபன்!

சென்னை: 65 வயதாகும் நடிகர் பார்த்தின் இயக்கத்தில் விரைவில் டீன்ஸ் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்குப் போட்டியாக தனது படம் வெளியாக போகிறது எனக் கூறி வரும் பார்த்திபன் கமல்ஹாசன் படம் பெரிய மலை என்றும் தனது படம் சிறு படம் என்றும் அவருடன் மோதுகிறேன் என சொல்வதே கலாட்டாவாக இருக்கிறது என பேசியுள்ளார்.

நடிகை சீதாவை திருமணம் செய்த பார்த்திபன் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். பார்த்திபன் மற்றும் சீதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

parthiban seetha teenz divorce

இந்நிலையில், டீன்ஸ் படத்தின் புரமோஷன் தொடர்பாக பேசிய பார்த்திபன் திருமணம் செட் ஆகவில்லை என்றால் உடனடியாக விலகி விடுவது நல்ல விஷயம் தான். ஆனால், அது குறித்த அறிவு தனக்கு வர 35 ஆண்டுகள் ஆகி விட்டது என பேசியுள்ளார்.

2 மாசத்துக்கு ஒரு டைவர்ஸ்: சினிமா பிரபலங்கள் மத்தியில் 2 மாசத்துக்கு ஒரு டைவர்ஸ் வரும். அதையெல்லாம் மக்கள் சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும், தலையில் மனைவியை தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களும் தான் விவாகரத்து செய்து பிரிவார்கள். எல்லாரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஆரம்பத்தில் விவாகரத்து எல்லாம் தப்பான விஷயம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் மனசுக்கு பிடிக்காமல் போய் விட்டால் சகித்துக் கொண்டு வாழ்ந்து அவர்களை கஷ்டப்படுத்துவதை விட பிரிந்து அவர்களை சந்தோஷமாக வைத்து விட்டு நாமும் சந்தோஷமாக இருக்கலாமே என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.

12 வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்: திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனக்கு திருமண வாழ்க்கை செட் ஆகவில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட நிலையிலும், விவாகரத்து செய்து பிரிய 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது முட்டாள்த்தனம் என உணர்ந்தேன் என்றும் விவாகரத்து தொடர்பாக பார்த்திபன் பேசியுள்ளார்.

11 ஆண்டுகால வாழ்க்கை: 1990ம் ஆண்டு நடிகை சீதாவை திருமணம் செய்துக் கொண்ட பார்த்திபன் 2001ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இருவருக்கும் இடையே சண்டை வரும் போதெல்லாம் தனியாக நாங்க ரெண்டு பேரும் வந்து பேசும் போதெல்லாம் எங்க குழந்தைங்க மறைந்திருந்து பார்ப்பதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். குழந்தைகளின் கஷ்டம் தான் இருவர் பிரிவதில் பெரிய வலியை கொடுக்கிறது என்றார்.

ஏமாத்திட்டான்: டீன்ஸ் படத்தின் ஒரு காட்சி கல்கி படத்தை விட பிரம்மாண்டமான காட்சி. அதன் விஎஃப்க்ஸ் செலவுக்காக 48 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஒருவர் விஎஃப்எக்ஸ் செய்து தருகிறேன் என சொல்லிய நிலையில் தான் படத்தை சம்மருக்கு வெளியிட நினைத்தேன். ஆனால், அவர் ஏமாற்றி விட்டார். குப்பை மாதிரி இருந்த விஎஃப்எக்ஸை ரிஜெக்ட் பண்ண நிலையில், தற்போது அவர் எனக்கு எதிராக பணம் கொடுக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரால் எனக்கு 48 லட்சம் நஷ்டமடைந்தது. மேலும், சில கோடி செலவு செய்து புதிதாக வேறு நிறுவனத்தை வைத்து விஎஃப்எக்ஸ் செய்ய பணத்தை எல்லாம் இழந்து செய்திருக்கிறேன். நானும் அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன். ஜூலை 9ம் தேதி வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. நிச்சயம் திட்டமிட்டபடி ஜூலை 12ம் தேதி டீன்ஸ் படத்தை வெளியிடுவேன் என பார்த்திபன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X