நயன்தாரா அமையுமா என்று நினைச்சிட்டே இருக்கக்கூடாது.. பார்த்திபன் என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 20 வருடங்களுக்கும் மேல் இருப்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது.

ஐயா படத்தில் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டன. அந்தத் தோல்விகள் அவரை கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்க செய்தது. அதனையடுத்து மீண்டும் திரையுலகுக்கு வந்த அவர் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளையும், ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.

விக்னேஷ் சிவனுடன் காதல்: அப்படி நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலோடு சில வருடங்கள் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்த அவர் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார். மேலும் ஹிந்தியிலும் ஜவான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியிருக்கிறார். மேலும் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Parthiban Talks about Nayanthara in Reality Show
Photo Credit:

மூக்குத்தி அம்மன் 2: அவர் இப்போது சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜையில் மீனாவை அவமானப்படுத்திவிட்டார் என்பதில் தொடங்கி; ஷூட்டிங்கின்போது நயனுக்கும் சுந்தர்.சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டதாகவும் தொடர்ந்து பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதேசமயம் இப்போதைக்கு அந்த பிரச்னைகள் முடிந்துவிட்டதாக திரைத்துறையில் கூறப்படுகிறது.

பார்த்திபன் பேச்சு: இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சமீபத்தி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி ஷோ நடக்கிறது.இதனை பார்த்திபன் தொகுத்து வழங்கினார். அப்போது விக்னேஷ் என்ற போட்டியாளரை பார்த்து, 'விக்னேஷ் என்று பெயரை வைத்துக்கொண்டால் நயன்தாரா அமையுமா என நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது" என்றார். அவரது இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விக்னேஷ் சிவனின் படங்கள்: முன்னதாக விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பலர் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. ஒரு வெற்றி படம் கொடுத்து காலங்கள் ஆகிவிட்டதால் இப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X