மணிரத்னம் மனைவி சுஹாசினிக்கு அந்த திமிரு நிறைய இருக்கிறது.. மேடையிலேயே பார்த்திபன் இப்படி பேசிட்டாரே!
சென்னை: இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு புதிய பாதை படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இப்போது கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். படத்துக்கு படம் தன்னுடைய மேக்கிங்கில், கதையில் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபனுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை.
நடிப்பில் மிரட்டிய பார்த்திபன்: இதற்கிடையே தான் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அவரே நடித்த சூழலில் இயக்கத்தில் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டதால் நடிப்பில் பெரிய அளவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். அப்படி அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: இதற்கிடையே சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் இயக்குநராக ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படமானது கதையே இல்லாமல் உருவான படம். அஞ்சான் படத்தோடு ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்களும் சுமாரான வரவேற்பைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய டீன்ஸ் படமும் வித்தியாசமான முயற்சி என்று பாராட்டப்பட்டாலும் தோல்வியைத்தான் சந்தித்தது.
பார்த்திபனின் பேச்சு: பார்த்திபனை பொறுத்தவரை தன்னுடைய கதை, திரைக்கதையில் எந்த அளவுக்கு வித்தியாசம் காண்பிக்கிறாரோ அதே அளவுக்கு தன்னுடைய பேச்சுக்களிலும் காண்பிக்கக்கூடியவர். பேச்சு மட்டுமின்றி தான் போடும் ட்வீட் உள்ளிட்டவைகளிலும் ஏதோவொரு வித்தியாசத்தை வைத்துவிடுவார். அது பல நேரங்களில் பாராட்டை பெற்றிருக்கிறது. சில நேரங்களில் ட்ரொல்களையும் சந்தித்திருக்கிறது.
சமீபத்தில்கூட ட்ரோல்: சமீபத்தில்கூட அஜித் பத்மபூஷன் விருது வாங்கியது தொடர்பாகவும், இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும் பார்த்திபன் போட்டிருந்த ட்வீட் பலராலும் கிண்டல் செய்யப்பட்டது. அனைத்து நேரங்களிலுமே அவர் ஏன் இப்படியாகவே பேசுகிறார் என்றும் பலர் கேள்விகளை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தி வெர்டிக்ட்: இந்நிலையில் வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் தி வெர்டிக்ட் என்ற படத்தின் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில், "சுஹாசினி மணிரத்னத்துக்கு தான் அழகு என்கிற திமிர் அதிகம். எந்த ஒரு பெண்ணும் 28 வயதுக்கு மேல் தன்னுடைய வயதை வெளியே சொல்லமாட்டார். ஆனால் இவரோ எனக்கு ஃபோன் செய்து பார்த்திபன் எனக்கு 50 வயது என்று சொல்வார். 50 வயதிலும் தான் எவ்வளவு அழகு என்ற திமிர் அவரிடம் இருக்கிறது. எனக்கு மணிரத்னம் மேல் காதல்; மணிரத்னத்துக்கு சுஹாசினி மீது காதல்" என்றார்.


Click it and Unblock the Notifications











