'ஒத்த செருப்பு சைஸ் 7'... எல்லோரையும் கையைத் தூக்கச் சொன்ன பார்த்திபன்.. இதற்காகத் தான்!
ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக அறிவுப் போட்டி ஒன்றை நடத்துகிறார் நடிகர் பார்த்திபன்.
சென்னை: ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக அறிவுப் போட்டி ஒன்றை நடத்த நடிகர் இயக்குனர் பார்த்திபன் திட்டமிட்டுள்ளனர்.
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடிக்கும் படம் ஒத்த செருப்பு. எதையுமே வித்தியாசமான கோணத்தில் அணுகும் பார்த்திபன், இந்த படத்துக்கான புரோமோஷனையும் வித்தியாசமாகவே கையாண்டு வருகிறார்.
இந்த படத்தின் தலைப்பை டிவிட்டரில் வெளியிட்டபோது, தனது சின்னம் 'ஒத்த செருப்பு' என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இது டிவிட்டரில் அன்றைய பேசுபொருளாக மாறியது.

ஒத்த செருப்பு அறிமுக விழா
இந்நிலையில் ஒத்த செருப்பு படத்துக்கான அறிமுக விழா வரும் 19ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக அவர் அறிவுப் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கை தூக்குங்கள்.அதற்கு ஒரு அறிவுப் போட்டி உண்டு.விவரம்
அடுத்தப் பதிவில் pic.twitter.com/M7h2cMahci — R.Parthiban (@rparthiepan) May 8, 2019 '>
டிவிட்டர் பதிவு
இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, "19 மே 'ஒத்த செருப்பு சைஸ் 7'- ன் அறிமுக விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளும் நிகழ்வில் உங்களில் யாருக்கெல்லாம் கலந்துக்கொள்ள விருப்பம்? கை தூக்குங்கள். அதற்கு ஒரு அறிவுப் போட்டி உண்டு. விவரம் அடுத்தப் பதிவில்" என குறிப்பிட்டுள்ளார்.

அறிவுப் போட்டி
எனவே இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள விரும்புவோர், பார்த்திபன் நடத்தபோகும் அறிவுப் போட்டியில் பங்குபெறுங்கள். ஆனால் அதற்குள் நம்மை அவர் குழப்பிவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

சிறப்பு விருந்தினராக கமல்
மே 19ம் தேதி நடைபெற உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் அறிமுக விழாவில் நடிகர் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பார்த்திபன் நேற்று கமலை சந்தித்தார். "கமல் எனும் நூலகத்தில் நானும் ஒரு நூலாய்' என்ற தலைப்பில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். எனவே தான் கமல் இந்த விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறுது.


Click it and Unblock the Notifications











